கிரிக்கெட் உலகில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் இன்றும் கத்துக்குட்டி அணிகளாகவே பார்க்கப்படுகின்றன. வங்கதேசம் அணி நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட் அணியாக இருந்தாலும், அவ்வப்போது மட்டுமே இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளை தோற்கடித்திருக்கின்றன. அதுவும் குறுகிய வடிவிலான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே அந்த வெற்றிகளை பதிவு செய்திருக்கின்றன.
ALSO READ | IPL Century: சதத்தை தவறவிட்டு 99 ரன்களில் அவுட்டான ஐபிஎல் கிரிக்கெட்டர்கள்
டெஸ்ட் போட்டியில் இதுவரை குறிப்பிடத்தகுந்த வெற்றியை வங்கதேசம் பதிவு செய்ததில்லை. அதுவும் அயலக மண்ணில் வெற்றியை ருசித்தது இல்லை. ஆனால், 2022 -ல் தொடக்கமான ஜனவரியில் சர்வதேச டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது அந்த அணி. பே ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதேபோல், அதிரடி மன்னர்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, அயர்லாந்து அணி வீழ்த்தி ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
ALSO READ | விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி சாதனைகள்!
பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்ற அயர்லாந்து, 2க்கு 1 ஒன்று என்ற கணக்கில் அந்த தொடரை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாபே அணி, அந்த அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு ஆரம்பமே அமர்களமாக தொடங்கியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR