சர்வதேச போட்டியில் தங்கம்...அசத்திய மாதவனின் மகன்
டென்மார்க் தலைவர் கோபன்ஹெகனில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
டென்மார்க் தலைவர் கோபன்ஹெகனில் டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பந்தய தூரத்தை 8:17.28 வினாடிகளில் கடந்து வேதாந்த் சாதனை படைத்துள்ளார்.
தனது மகன் பதக்கம் பெற்றும் வீடியோ பதிவை நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். உங்களது வாழ்த்துகளுடனும், கடவுளின் ஆசிர்வாதத்தினாலும் இந்த வெற்றி தொடரும் எனவும் நடிகர் மாதவன் பதிவிட்டுள்ளார். மேலும் வேதாந்தின் பயிற்சியாளர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மாதவன் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நடிகர் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | Danish Open: நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்
இந்த தங்கப்பதக்கம் டேனிஷ் ஓபனில் வேதாந்த் மாதவன் வெல்லும் 2-வது பதக்கம் ஆகும். முன்னதாக கடந்த 15-ம் தேதி நடைபெற்ற 1,500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வேதாந்த் மாதவன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் வேதாந்த் மாதவன் 7 பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தினார்.
மற்றொரு இந்திய வீரரான பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். டேனிஷ் ஓபனின் 2 தங்கம், ஒரு வெள்ளி என இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது.
மேலும் படிக்க | IPL நிறைவு விழா நடத்தும் முன்மொழிவுக்கான கோரிக்கையை வெளியிட்டது பிசிசிஐ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR