டெஸ்ட் அணியில் இடம் பெரும் ஹர்திக் பாண்டியா? இந்த வீரரின் இடத்திற்கு ஆபத்து!
பார்டர்-கவாஸ்கர் தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் அணியில் எடுக்க பிசிசிஐ விரும்புகிறது.
இந்திய அணியின் முக்கியமான பலிங் ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார். அவரது தனித்துவமான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முக்கியமான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். சமீபத்திய ஆண்டுகளில் இவரை போல ஒரு ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் ஹர்திக் பாண்டியா ஒயிட் பால்லில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் இடம்பெறுவது ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு சவாலாகவே உள்ளது. அவரால் டெஸ்ட் அணியில் தனக்கான ஒரு இடத்தை நிரப்ப முடியவில்லை. கடைசியாக 2018 ஆம் ஆண்டு தான் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடினார், அதன் பிறகு ஒரு தொடரிலும் அவர் இடம் பெறவில்லை.
ஹர்திக் பாண்டியா டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் போனதற்கு முக்கிய காரணம் அவரது உடல் தகுதி தான். அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவரை பிசிசிஐ டெஸ்ட் அணியில் சேர்க்க விரும்பவில்லை. 2023 ஒரு நாள் உலக கோப்பையில் கூட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். 2018 முதல் டி20 மற்றும் ஒரு நாள் அணியில் மட்டுமே இடம்பெற்று வருகிறார் ஹர்திக் பாண்டியா. அதேசமயம் உள்ளூர் தொடர்களிலும் ரெட் பால் கிரிக்கெட்டில் அவர் பங்கேற்பதில்லை.
கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் நீக்கம்!
டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தது தொடர்ந்து அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கும் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி தான் காரணம் என்று சொல்லப்பட்டது. நீண்ட காலம் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க ஒருவர் தேவை என்று சூரிய குமாரை நியமித்ததாக பிசிசிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற முயற்சி செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கான உடற் தகுதியை பெற ஹர்திக் பாண்டியா கடினமாக உழைத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார். இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி போட்டியிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. இந்திய அணி அடுத்த சில மாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளதால் ஹர்திக் பாண்டியா முழு ஓய்வில் இருக்கிறார். அடுத்த மாதம் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம் பெறலாம்.
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்கு ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர் தேவை. எனவே அந்த இடத்தில் ஹர்திக் பாண்டியாவை இடம்பெறச் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜடேஜா, அஸ்வின் போன்ற ஸ்பின் ஆல் ரவுண்டர் இருந்தாலும் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர் நிச்சயம் இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. கடைசியாக நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் ஷர்துல் தாகூர் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ