இந்திய அணியின் மிகச்சிறந்த தொடக்க வீரராக இருந்த வீரேந்திர சேவாக், டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை 2007 ஆம் ஆண்டே முடிவுக்கு வந்திருக்கும் என தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், அதனை நிகழாமல் காப்பாற்றியவர் அனில் கும்பிளே எனத் தெரிவித்துள்ள அவர், அதன்பிறகு அணியில் எனக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தாக தெரிவித்துள்ள்ளார்.ஒரு வருடம் மோசமான ஃபார்ம் காரணமாக அப்போது இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார் வீரேந்திர சேவாக். 


மேலும் படிக்க | IPL2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்


சேவாக் கிரிக்கெட் கேரியர்


2007 ஆம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமையவில்லை. அணிக்குள் திரும்புவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. டெஸ்ட் அணியில் இடம் இல்லை என்பது கிட்டத்தட்ட எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால், அது திடீரென தெரியவந்தது. அனில் கும்பிளே கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது. அவர் 2008 ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு எனக்கான வாய்ப்பு கிடைத்தது


ஒரு வருடம் எனக்கான வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயம் டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்திருப்பேன். டெஸ்ட் போட்டிக்கு திரும்பியது அனில் கும்பிளே ஒருவரால் தான்.அவர் மட்டும் அந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்திருக்கும்


2007 - 08 ஆம் ஆண்டு டெஸ்ட் சுற்றுப் பயணத்தில் தான் எனக்கான வாய்ப்பு கிடைத்தது. பெர்த் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பயிற்சி ஆட்டத்தில் நாங்கள் விளையாடினோம். அப்போது அனில் கும்பிளே என்னிடம் வந்து, நீங்கள் அரைசதம் அடித்தால் பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கிறேன் என உறுதியளித்தார். 


மேலும் படிக்க | அர்ஜுனை வெளியிலேயே உட்கார வைத்த MI அணி- மகனைப் பற்றி சச்சின் சொல்வது என்ன?


சேவாக் சதம்


அந்தப் போட்டியில் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பாக விளையாடி சதம் அடித்தேன். அதனால், பெர்த் டெஸ்ட் போட்டியிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியில் 63 ரன்கள் எடுத்தேன். அந்த ரன்கள் மிகவும் முக்கியமான ரன்கள். ஒருவேளை நான் விளையாடாமல் இருந்திருந்தால் கும்பிளேவை நோக்கி கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் எழக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அந்த தொடருக்குப் பிறகு தொடர்ந்து டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என அனில் பாய் என்னிடம் வாக்குறுதி அளித்தார் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR