புதுடெல்லி: துபாய் சர்வதேச மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் இடையே போட்டிகள் நடைபெற்ற  போது விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா கணவரை உற்சாகப்படுத்த மைதானத்திற்கு வந்தார். தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்ட பிற்கு, அனுஷ்கா முதல் முறையாக பொதுவில் தோன்றியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CSK வுக்கு எதிராக RCB 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்தார் என்பது ஆட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.


விராட் கோலியின் மகிழ்ச்சிக்கு அதை விட மிகப்பெரிய காரணம் மைதானத்தில் அவரது மனைவி அனுஷ்கா போட்டியை பார்க்க வந்தது தான். கோஹ்லியின் ஒவ்வொரு ஷாட்டிற்கும் அனுஷ்கா எவாறு உற்சாகப்படுத்துகிறார் என்பதை அனைவரும் அறிய அனைவர் கண்களும் அவர் மீதே இருந்தது. ஆனால், அனுஷ்கா விட ரியாக்‌ஷனே இல்லாமல் இருந்தது. பின்னர் இறுதியாக அனுஷ்கா விராட்டுக்கு கொடுத்த Flying Kiss விராட்டை மட்டுமல்ல அனைவரையும் உற்சாகப்படுத்துவதாக இருந்தது. 



இதன் பின்னர், அனுஷ்காவின் இந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இதன் காரணமாக, ட்விட்டர் உட்பட பல தளங்களில் மக்கள் அதனை ரசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ரசிகர்கள் இந்த தருணத்தை முழுமையாக ரசித்தனர். ...


பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஐபிஎல் 2020 தொடங்கியதிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வருகிறார் என்றாலும், கணவர் விராட் கோலி அணியை உற்சாகப்படுத்த மைதானம் வந்தது இதுவே முதல் முறை.


அனுஷ்கா முன்னிலையில், விராட் இதற்கு முன்பு சிறந்த வகையில் இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். இந்த ஜோடி திருமணம் செய்வதற்கு முன்பே, அனுஷ்கா விராட் கோலியை பல போட்டிகளில் உற்சாகப்படுத்த மைதானத்திற்கு வந்திருந்தார்.


மேலும் படிக்க | IPL 2020: மகேந்திர சிங் தோனியின் மகள் ஜீவாவுக்கு பாலியல் மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe