IPL 2020: மகேந்திர சிங் தோனியின் மகள் ஜீவாவுக்கு பாலியல் மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ஐந்து வயது மகளுக்கு பாலியல் பலாத்காரம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 10, 2020, 05:15 PM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஐந்து வயது மகளுக்கு பாலியல் மிரட்டல்.
  • ஜார்க்கண்டின் ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோனி 12 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்கள் எடுத்திருந்தார்.
IPL 2020: மகேந்திர சிங் தோனியின் மகள் ஜீவாவுக்கு பாலியல் மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு title=

Ziva is Getting Rape Threats: எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி கடந்த புதன்கிழமை ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது. மகேந்திர சிங் தோனி 12 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்கள் எடுத்திருந்தார். இந்த தோல்வியைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ஐந்து வயது மகளுக்கு பாலியல் பலாத்காரம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேப்டன் கூல் தோனியின் 6 வயது மகள் ஜீவா (Ziva) அச்சுறுத்தப்பட்டதை அடுத்து ஜார்க்கண்டின் ராஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது என்று குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  IPL 2019: தோனியை ஊக்கப்படுத்தி குரலெழுப்பிய ஜீவா!

CSK அணி தோல்வியடைந்ததால் கோபமடைந்த சிலர் தோனியையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தத் தொடங்கினர். சிலர் தோனி (Mahendra Singh Dhoni) மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் (Sakshi Dhoni) இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவரது ரசிகர்களின் கோபம் சமூக ஊடகங்களில் வெடித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோனியின் ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ALSO READ | மகளிடம் தோற்றுப்போன டோனி; வைரலாகும் வீடியோ!

ஐ.பி.எல்லின் அந்த போட்டியில், கே.கே.ஆர் அணி அடித்த 168 ரன்களின் இலக்கை அடைய சி.எஸ்.கே அணி தவறிவிட்டது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். சிலர் மகேந்திர சிங் தோனி மற்றும் கேதார் ஜாதவ் (Kedar Jadhav) ஆகியோரை சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்து கொண்டிருந்தனர். திடீரென இன்ஸ்டாகிராமில் தோனியின் மகள் பற்றி தவறான கருத்துக்களை கூறத்தொடங்கின. அதன் பின்னர் பல பயனர்கள், இதுபோன்று பதிவிடுவோர் மீது வழக்கு பதிய வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.

இதுக்குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் (Irapan Patan) தனது ட்வீட்டில், "அனைத்து வீரர்களும் தங்களது சிறந்த ஆட்டத்தை வழங்குகிறார்கள். சில நேரங்களில் அது பலனளிக்காது. அதற்காக ஒரு குழந்தையை அச்சுறுத்தும் உரிமை யாருக்கும் ளிடையாது".

ALSO READ |  இணையத்தில் வைரலாகும் #CSK வீரர்களின் குழந்தை புகைப்படங்கள்!

நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நக்மாவும் (Nagma) தந்து ட்வீட்டர் பக்கத்தில், "நமது நாடு எங்கே போகிறது? தோனியின் ஐந்து வயது மகள் ஜீவா கற்பழிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது எவ்வளவு விசித்திரமானது. பிரதமரே, நம் நாட்டில் என்ன நடக்கிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News