வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்! களமிறக்குவாரா டிராவிட்
ஒருநாள் போட்டியில் களமிறங்குவதற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்கிற்கு பயிற்சியாளர் டிராவிட் வாய்ப்பு கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. முதல் 2 போட்டிகளையும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியிருந்தாலும், இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கிளீன் ஸ்வீப் செய்ய ஆர்வமாக இருக்கிறது. அதேநேரத்தில், முதல் 2 ஒருநாள் போட்டியில் களமிறங்காத இந்திய வீரர்கள் இந்தப் போட்டியில் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகிய இருவரும் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக இருப்பதால், இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது மட்டும் சந்தேகமாக இருக்கிறது.
மேலும் படிக்க | தினேஷ் கார்த்திக்கின் பெயரை கோஷமிட்ட ரசிகர்கள்! கையெடுத்து கும்பிட்ட முரளி விஜய்!
ஷூப்மான் கில் - தவான் ஜோடி முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியது. அதே இணை 3வது போட்டியிலும் களமிறங்குமா? அல்லது கடந்த இரு போட்டிகளிலும் விளையாடாத ருதுராஜ் அல்லது இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இஷான் கிஷனை விக்கெட் கீப்பிங் ஆப்சனாக கருதலாம் என்றால், சஞ்சு சாம்சன் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு பதிலாக இஷானை டிராவிட் களமிறக்குவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் அர்ஷ்தீப் சிங் முன்னணியில் இருக்கிறார். முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் வயிற்று வலி காரணமாக விளையாட முடியாத அவர், 3வது போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார். இப்போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், இந்திய அணிக்காக தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பும் அர்ஷ்தீப் சிங்கிற்கு கிடைக்கும். 20 ஓவர் போட்டியில் கச்சிதமாக பந்துவீசியது போலவே ஒருநாள் போட்டியிலும் நல்ல லிஸ்ட் ஏ ரெக்கார்டை அவர் வைத்துள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அவர் களமிறங்கினால் ஆவேஷ்கானின் இடம் கேள்விக்குறியாகும். பாகிஸ்தானின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான டேனீஷ் கனேரியா ஒரு பேட்டியில் பேசும்போது கூட, அர்ஷ்தீப் சிங்கிற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஜடேஜா களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜடேஜா, அதில் இருந்து மீண்டு கொண்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் காயம் குறித்த முழுமையான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை, ஜேசன் ஹோல்டர் பிளேயிங் லெவனில் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் படிக்க | ஐசிசி 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ