இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களாக இருக்கும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை 20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி தோற்றதில் இருந்து அவர்களுக்கு  சர்வதேச  கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே 20 ஓவர் பார்மேட்டில் களம் கண்டது. 50 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி தோற்றிருக்கும் நிலையில், 20 ஓவர் அணியில் அவர்களுக்கான இடம் என்பது மேலும் கேள்விக்குறியாகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸூக்கு இப்பவே கோல்டு கிடைச்சிருக்கு - அஸ்வின் பூரிப்பு


பிசிசிஐ வட்டாரத்தில் எழுந்துள்ள  பேச்சில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ரோகித் சர்மா  மற்றும் விராட் கோலி ஆகியோர் இனி விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்றும், அவர்கள் தங்களின் சர்வதேச பயணம் குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என  சூசகமாக தெரிவித்துள்ளது.  அதாவது ஓய்வு முடிவு குறித்து பரிசீலிக்கலாம் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 20 ஓவர் பார்மேட்டில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகின்றனர்.


இதுகுறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, விராட் கோலி மற்றும் ரோகித் ஆகியோர் விரும்பும் வரை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம் என தெரிவித்துள்ளார். " அவர்கள் இருவரும் சர்வதேச அளவில் தரமான பிளேயர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்கள் இளம் வீரர்களுக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். இப்போது விளையாடும் இளம் வீரர்கள் அவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு விளையாட வேண்டும். வயது ஒரு தடை கிடையாது. எந்தவயதிலும் சிறப்பாக விளையாட முடியும். 


ரோகித், விராட் கோலி இருவரும் தாங்கள் விரும்பும் வரை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம். அதேநேரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இப்போது இருக்கும் சூழலை குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அவர்களிடம் சென்று யாரும் ஓய்வு எடுங்கள் என தெரிவிக்க முடியாது. ரன்கள் அடித்தால் அவர்கள் தொடர்ந்து விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை" என தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா - மும்பை இந்தியன்ஸ் டீல் சீக்ரெட்ஸ்..! குஜராத் அணியை விட்டு விலக காரணம் இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ