ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை விட்டு விலக என்ன காரணம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, இம்முறை திடீரென அந்த அணியைவிட்டு விலகியுள்ளார்.
அத்துடன் தன்னுடைய ஆஸ்தான அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கே அவர் திரும்ப இருக்கிறார். இதற்கான டீல் திரைமறைவில் ஏற்பட்டுள்ளது. அந்த டீல் என்ன? என்பது தான் பலரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் சீக்ரெட்
தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா அந்த அணியை நிர்வகிக்கும் குஜராத் டைட்டன்ஸ் உரிமையாளர் சிவிசி கேபிட்டல் பார்ட்னர்ஸிடம் அதிக பணம் மற்றும் பிராண்ட் ஒப்புதல்களை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பாண்டியாவின் கோரிக்கையை சிவிசி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் நேரடியாக மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடந்திருக்கிறது. பின்னர் ஹர்திக் பாண்டியா இதே கோரிக்கைகளுடன் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டார்.
இதுபோன்ற கோல்டன் டைமுக்காக காத்திருந்த மும்பை இந்தியன்ஸ் பிராண்ட்களின் ஒப்புதலுக்காக ஹர்திக் பாண்டியாவுக்கு உறுதியளித்தது.
இதனையடுத்து ஹர்திக் பாண்டியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்திருக்கிறது.
ஆனால் உலகக் கோப்பை காரணமாக அவர்கள் அதை வெளியிடவில்லை. இன்னும் சில நாட்களில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அறிவிப்பு வெளியாகும்.