CSK -வுக்கு திரும்ப அஸ்வின் விருப்பம்! கிரீன் சிக்னலை கண்டுகொள்வாரா தோனி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து விளையாட தயாராக இருப்பதாக, இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் (IPL) 2022 ஆம் ஆண்டுக்கான ஏலம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. லக்னோ, அகமதாபாத் என இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், வீரர்களுக்கான மெகா ஏலமாக இருக்கும். இதற்காக, ஏற்கனவே இருக்கும் அணிகள் தலா 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவித்துள்ளன. இதனால், இந்த முறை யார் எந்த அணிக்கு செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே மோலோங்கியுள்ளது.
மேலும் படிக்க | IPL 2023: தோனியின் சரவெடி.. சேப்பாக்கத்தில் தொலைந்த பந்துகள்..! சம்பவம் இருக்கு
பஞ்சாப் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் லக்னோ அணிக்கு தலைமை தாங்க இருப்பதாக கூறப்படுகிறது. பஞ்சாப் அணி நிர்வாகம் அவரை தக்க வைக்க விரும்பியபோதும், ஏலத்துக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததால், கே.எல்.ராகுலை அந்த அணி விடுவித்தது. மும்பை அணியில் பாண்டியா சகோதரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய அவர்கள், இந்தமுறை ஏலத்தின் மூலம் புதிய அணிக்கு செல்ல உள்ளனர். இதேபோல், தமிழக வீரரான அஸ்வினையும் டெல்லி அணி விடுவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய அஷ்வின், 2016-க்குப் பிறகு சி.எஸ்.கே அணியில் இடம்பெறவில்லை. பஞ்சாப் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு, பின்னர் டெல்லி அணிக்கு சென்றார். இப்போது, அந்த அணி அவரை விடுவித்துள்ளதால் புதிதாக எந்த அணிக்கு அவர் செல்வார் என்ற கேள்வி இருந்தது. இதுகுறித்து பதில் அளித்த அஸ்வின், சி.எஸ்.கே அணிக்கு திரும்ப விருப்பம் உள்ளதாகவும், ஆனால் ஏலத்தில் என்ன நடக்கும்? என்பதை பொறுத்ததான் தீர்மானிக்க முடியும் எனக் கூறியுள்ளார். சி.எஸ்.கே தனக்கு ஒரு பள்ளி எனக் கூறிய அவர், அங்குதான் ஆரம்ப பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். சில காலம் மற்ற அணிகளுக்காக விளையாடி இருந்தாலும், சொந்த மாநில அணிக்காக விளையாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். சென்னை அணிக்கு வருவதற்கு அஸ்வின் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில், தோனி என்ன முடிவெடுப்பார்? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே துருப்புச்சீட்டு இவர் தான்: ஹர்பஜன் சிங் கணிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR