இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய கோப்பை 2022க்கான இந்திய அணியை அறிவித்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) தொடங்க உள்ள போட்டிகாக்கான இந்திய அணியை ரோஹித் சர்மா வழி நடத்த உள்ளார். 2022 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.  இந்த ஆண்டு ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆகஸ்ட் 28 அன்று பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான மோதலுடன் தொடங்கும். கடைசியாக இந்திய அணி 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்து இருந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2022 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது


இந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ எப்போது அறிவிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.  ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 2022 ஆசியக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரு விக்கெட் கீப்பர்கள் அணியில் உள்ளனர்.


2022 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (C), கே.எல். ராகுல் (WC), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (Wk), தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (Wk), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திரா சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.


காத்திருப்பு வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்சர் படேல்.


மேலும் படிக்க | முடிந்தது மேற்கிந்திய தீவுகள் தொடர்! மீண்டும் குழப்பத்தில் பிசிசிஐ!


இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் போட்டிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளன. 6வது அணி தகுதிச் சுற்று மூலம் முடிவு செய்யப்படும். குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடுகின்றன.  போட்டியின் சூப்பர் 4 நிலை செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் மற்றும் இறுதிப் போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி துபாயில் நடைபெறும். இந்த ஆண்டு ஆசிய கோப்பை 20 ஓவர் வடிவத்தில் நடைபெறுகிறது மற்றும் போட்டியை நடத்துவதற்காக துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இரண்டு மைதானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஆசிய கோப்பையில் இந்திய அணி அதிக பட்டங்களை (7) வென்றுள்ளது. 5 பட்டங்களை பெற்ற இலங்கை அணி 2வது இடத்தில் உள்ளது.


மேலும் படிக்க | சூர்யகுமார், பந்த், இஷான் கிஷன் வேண்டாம்! இவர் தான் சரி - முன்னாள் வீரர் கருத்து!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ