#AusOpen - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு, சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு, சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.
இன்று நடைப்பெற்ற அரையிறுதி போட்டியில் தென் கொரிய வீரர் ஹெயின் சங் மற்றும் பெடரர் போட்டியிட்டனர். இப்போட்டியின் முதல் செட்-ன் 1-6 என்ற கணக்கில் இழந்ந சங், இரண்டாவது சுற்றின் போது அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இதனால் பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர், குரேஷியாவின் மரின் சிலிக்கை எதிர்கொள்கிறார்.
36 வயதாகும் ரோஜர் பெடரர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 30-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!