ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண் வரும் இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில்  டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் கடந்த சனவரி 12 ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து. ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது.


இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் குவித்து ஆஸ்., ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். இதனையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கத்தில் இந்திய அணி களம் கண்டது. 


களம் கண்ட இந்திய அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் 0(1) ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கேப்டன் விராட்  3 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த அம்பத்தி ராயுடு ௦ ரன்னில் அவுட் ஆகா நான்கு ரன்னுக்கு மூன்று விக்கெட்டை இழந்தது. எனினும் மறுமுனையில் ரோகித் ஒன்-மேன் ஆர்மியாக நின்று 133(129) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்த முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனி அரை சதம் அடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்தனர். ஆனால் கடைசி வரை போரடி இந்திய அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.


இந்திய அணி வீரர்களின் தொடர் வெளியேற்றத்தால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து ஆஸி., முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த நிலையில், நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரை வெல்லக்கூடும். எனவே இந்திய அணி எப்படியாவது, இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்று பல வியூகங்கள் வகுக்கக்கூடும். 


அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கும் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு மிக முக்கியமானது ஆகும். எனவே இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.