ஆஸ்திரேலியா- இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலியா ரசிகருக்கு இந்தியா ரசிகர் காதலை சொன்ன வீடியோ வைரலாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணி சிட்னி மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்துக் கொண்டிருந்தது. மைதானத்தில் இரு அணிகளும் எதிரும் புதிருமாக ஆடிக் கொண்டிருந்தாலும், பார்வையாளர் பகுதியில் வித்தியாசமான ஆனால் காணக் கிடைக்காத ரொமான்ஸ் காட்சி ஒன்றை காண முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக இருந்த ரசிகர் ஒருவருக்கு, இந்திய ரசிகர் காதலை சொல்ல  முழந்தாளிட்டு, முழங்காலில் நின்றது போட்டியை விட சுவாரசியமாக இருந்தது.


இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில், 390 என்ற இலக்கை நோக்கி இந்தியா டென்சனுடன் விளையாடிக் கொண்டிருந்தது.  ஆனால், கூட்டத்தில் இருந்த ஒரு இந்திய ஆதரவாளர், டென்சனே இல்லாமல் முழந்தாளிட்டு ஆஸ்திரேலிய ரசிகருக்கு காதலை முன்மொழிந்தார். கூட்டத்தில் இருந்தவர்களும் இந்த காதல் முன்மொழிவைக் கண்டு உற்சாகம் அடைந்தனர். அவர்களின் உற்சாகத்துக்கு இடையே, காதல் முன்மொழிவை ஆஸ்திரேலிய ரசிகரும் ஏற்றுக்கொண்டார். இந்த தருணத்தை cricket.com.au தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது. 



அது மட்டுமல்ல, காதலை ஏற்றுக் கொண்ட பெண்ணை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க அந்த ரசிகர் எழுந்தார். இந்த சிறப்பு தருணத்தை படம் பிடித்து கிரிக்கெட்.காம் பகிர்ந்த வீடியோவில், ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell ) அந்த ரசிகர்களை புன்னகையுடன் பார்ப்பதையும் காண முடிந்தது.  


இரண்டவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றாலும், இந்திய ரசிகர் காதலை சொல்வதில் வெற்றிப் பெற்றார் என்று ஆறுதல் அடைந்தார் என்று திருப்திப்படுக் கொள்ளலாம்.



இந்த கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஸ்டீவ் ஸ்மித் தனது தொடரின் இரண்டாவது சதத்தையும் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் (David Warner) மற்றும் ஆரோன் பிஞ்ச் (Aaron Finch) மற்றும் மார்னஸ் லாபுசாக்னே (Marnus Labuschagne ) மற்றும் மேக்ஸ்வெல் (Maxwell) ஆகியோர் அரைசதங்கள் எடுத்தனர்.


390 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. முதல் ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வென்றதால், ஆஸ்திரேலியா அணி ஒருநாள் போட்டித்தொடரை வென்றுவிட்டது.


தொடர்புடைய செய்தி: கிரிக்கெட்டில் கலவரம், பிட்சில் பரபரப்பு: Ind vs Aus போட்டியில் நடந்தது என்ன


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR