உலக கோப்பை 2021 குரூப் போட்டிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன.  குரூப் Aவில் இங்கிலாந்து அணியும், குரூப் Bயில் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த இரண்டு அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது.  குரூப் Bயில் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் போராடி வருகிறது. நாளை நடைபெற உள்ள நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி பெறும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ சஹாலின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!


குரூப் Aவில் பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள், ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் அரை இறுதி செல்லும் வாய்ப்பை இழந்து விட்டனர்.  ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் நான்கு போட்டிகளில் விளையாடி தலா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.  இன்று இந்த இரண்டு அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் விளையாடுகின்றன.  தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியுடன் இரவு 7.30 க்கு மோதுகிறது.  ஆஸ்திரேலியா அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மதியம் 3.30 மணிக்கு மோதுகிறது.  


 



ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை எதிர்த்து விளையாடும் அணிகள் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும் வெற்றி பெற்றாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.  அதேவேளையில் ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.  ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரண்டு அணிகள் இன்று வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.  அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற இரண்டு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. 


ALSO READ ஸ்காட்லாந்து அணியை வென்று விராட் கோலிக்கு பிறந்த நா பரிசளித்த இந்திய அணி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR