Tokyo Olympics 2020: டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா தோல்வியுற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மல்யுத்தப் போட்டிகளின் (Wrestling) 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா தோல்வியுற்றார். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பஜ்ரங் பூனியா நாளை மோதுவார்.



இன்று நடந்த மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் பஜ்ரங் பூனியா அஜர்பைஜானின் ஹஜியிடம் 12-5 என்ற கணக்கில் தோல்வியுற்றார். 


ALSO READ: Tokyo Olympics women's hockey: இந்திய வீராங்கனைகள் போராடி தோல்வி


2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் (Tokyo Olympic Games) இந்தியாவின் பஜ்ரங் புனியா மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அவர் கண்டிப்பாக தங்கப்பதக்கம் வெல்வார் என கூறப்பட்டது. இன்னும் அவர் பதக்கம் வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளது.


நாளை நடக்கவுள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவர் ரஷ்யாவைச் சேர்ந்த காட்ஜிமுராட் ரஷிதோவை எதிர்கொள்கிறார்.


முன்னதாக, இன்று காலை நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய வீராங்கனைகள் கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவினர்.


நேற்று, டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவு போட்டியில் மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார். ரஷ்ய வீரர் சவுர் உகுவேவிடம் அவர் 4-7 என்ற கணக்கில் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தார்.


 


ALSO READ: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR