மைதானத்தில் சறுக்கி விளையாடிய பங்களாதேஷ் வீரர்! வைரல் வீடியோ!
பங்களாதேஷ் - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.
உலக கோப்பை முடிந்த பின்பு பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றது. டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றது. இதனையடுத்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி விளையாடியது.
நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கி 6 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. 63.2 ஒவர்கள் வீசப்பட்ட நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்துள்ளது பாகிஸ்தான்.
மழையின் காரணமாக மைதானம் முழுவதும் மூடப்பட்டுள்ள நிலையில் அதில் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் Shakib Al Hasan சறுக்கி விளையாடும் காட்சி வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மறுபுறம் பாகிஸ்தான் வீரர்கள் தங்கி இருக்கும் அறையில் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களும் வைரல் ஆகி வருகிறது.
ALSO READ ஒமிக்ரான் பீதி: இந்தியா-தென்னாப்ரிக்கா தொடர் ஒத்திவைப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR