புதுடெல்லி: கொரோனா வைரஸின் (Coronavirus) ஓமிக்ரான் மாறுபாட்டின் (Omicron Variant) அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் (India tour of South Africa) குறித்து முக்கிய முடிவு வெளியாகியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடர் முடிந்ததும், இந்திய அணி (Team India) தென்னாப்பிரிக்கா (South Africa) செல்ல உள்ளது. பழைய அட்டவணையின்படி, சுமார் 7 வார சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்த போட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் கூறுகையில், தென்னாப்பிரிக்காவில் (South Africa Tour) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
India to tour South Africa for three Tests and three ODIS, T20Is to be played later: BCCI secretary Jay Shah to ANI pic.twitter.com/2DkPVEDGzR
— ANI (@ANI) December 4, 2021
அதே நேரத்தில், ஒமிக்ரான் (Omicron) வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
முன்னதாக கொரோனா பயம் காரணமாக இங்கிலாந்தில் இந்திய அணி 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மறுத்தது. அதேபோல் கடந்த வருடம் தென்னாப்பிரிக்க அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடாமல் நாடு திரும்பியது. அதனபடி தற்போது உருமாறிய புதிய வகை ஒமிக்ரான் கொரோனா தொற்று காரணமாக திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா தொடர் நடைபெறுமா என்கிற கேள்விகள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | IND vs NZ: அம்பயரின் தவறான முடிவு, கடுப்பில் மட்டையை ஓங்கி அடித்த விராட் கோலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR