BBL -ல் விநோதம்..! பிளேயிங் 11-ல் விளையாடும் பயிற்சியாளர்..!
பிக்பாஷ் லீக் தொடரில் கடைசி நேரத்தில் பிளேயர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியானதால், இணை பயிற்சியாளர் பிளேயிங் 11-ல் சேர்க்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. சேலஞ்சர் சுற்றில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை, சிட்னி சிக்ஸ்ர் அணி எதிர்கொள்கிறது. புதன்கிழமை போட்டி நடைபெறும் சூழலில், அந்த அணியின் விக்கெட் கீப்பரான ஜோஸ் பிலிப்பி (Josh Philippe)-க்கு நேற்று எதிர்பாரதவிதமாக கொரோனா தொற்று உறுதியானது. போட்டி நடைபெறுவதற்கு 24 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, அணி நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ALSO READ | கோலி திருமணமே செய்து இருக்கக் கூடாது: அப்ரிடி சர்ச்சை கருத்து!
இதனால், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை அணிக்குள் கொண்டு வருவதற்கு சிட்னி சிக்ஸர்ஸ் அணி கடும் முயற்சியை எடுத்தது. அந்த அணியின் கோரிக்கையை பரிசீலித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஒப்பந்தத்தில் இல்லாத வீரரை புதிதாக களமிறக்குவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்ட சிட்னி சிக்ஸர்ஸ் அணி, அந்த அணியின் இணை பயிற்சியாளராக உள்ள ஜே லென்டனை (Jay Lenton) களமிறக்குவதற்கு அனுமதி கேட்டது.
இந்த கோரிக்கைக்கு உடனடியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கிரீன் சிக்னல் கொடுத்தது. இதனையடுத்து, அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான சேலஞ்சர் போட்டியில் அவர் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பிளேயிங் 11-ல் இடம்பிடித்தார். அணியின் பயிற்சியாளர் ஒருவர், ஆடும் பிளேயிங் 11ல் விளையாடுவது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது. ஜே லெண்டன் பிக்பாஸ் லீக்கில் சிட்னி தண்டர் (Sydney Thunder) அணிக்கு விக்கெட் கீப்பராக இருந்தார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு இணை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
ALSO READ | வாமிகா விவகாரம்: விராட் கோலிக்கு நெட்டிசன்கள் பதிலடி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR