Chetan Sharma Resign From BCCI Chief Selector: இந்திய கிரிக்கெட் அணியில் ஊக்கமருந்து ஊசிகள் பயன்படுத்துவது உள்ளிட்ட பிசிசிஐ சார்ந்த பல்வேறு தகவல்களை Zee News நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் பிசிசிஐ அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்திருந்தார். அந்த உளவு கேமாராவில் அவர் கூறியிருந்த அத்தனை தகவல்களும் கடந்த பிப். 14ஆம் தேதி வெளியாகி கிரிக்கெட் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, அதுகுறித்த பேச்சுகள் போய்கொண்டிருந்த நிலையில், தனது தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து சேத்தன் சர்மா விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவரின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் ஒப்படைத்ததாகவும், அதனை ஜெய் ஷா ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. Zee News ஸ்டிங் ஆப்ரேஷனில் வெளியான தகவல்களை அடுத்தே அவரின் ராஜினாமா அமைந்துள்ளது. 


மேலும் படிக்க | Zee Exclusive: 'கங்குலிக்கு விராட்டை பிடிக்கவில்லை' கங்குலி vs கோலி விவகாரம் - சேத்தன் சர்மா கூறியது என்ன?



இதனால், தற்போது நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் கடைசி இரண்டு போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக்குழுவின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, விரைவில் சேத்தன் சர்மாவுக்கு பதில் மற்றொருவரை தேர்வுக்குழுவின் தலைவராக பிசிசிஐ நியமிக்கலாம் என கூறப்படுகிறது. 


Zee News ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் சர்மா சிக்கியதற்கு பிசிசிஐயின் உயர்மட்ட நிர்வாகிகள் அவரிடம் கருணை காட்டவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஆனால் இந்த சம்பவம் ஊடகங்கள், இந்திய அணி மற்றும் தேர்வாளர்களுக்கு இடையிலான உறவில் நீண்டகால விளைவை ஏற்படுத்தக்கூடும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் என்பதால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு வரையறுக்கப்பட்ட தருணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


ஊக்கமருந்து ஊசி பயன்பாடு, விராட் கோலி - கங்குலி விவகாரம், விராட் - ரோஹித் உறவு உள்ளிட்ட பல தகவல்கள் சேத்தன் சர்மாவிடம் Zee News நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷ்னில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க  | Zee Exclusive: ஊக்கமருந்து ஊசியில் திளைக்கும் இந்திய வீரர்கள்... சேத்தன் சர்மாவால் அம்பலமான தகவல்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ