Game Over: Zee Media நடத்திய பிரத்யேக மறைமுக ஆபரேஷனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைமை அணித் தேர்வாளர் சேத்தன் சர்மா, ஊக்கமருந்து சோதனை, உடற்தகுதி சோதனை, கங்குலி-கோஹ்லி சர்ச்சை ஆகியவை குறித்து அதிர்ச்சிகரமான கருத்துகளை தெரிவித்தது, புது புயலை கிளப்பியுள்ளது.
இந்த மறைமுக ஆபரேஷனில், சேத்தன் சர்மா, இதுவரை வெளியில் வராமல் இருந்த சில ரகசியங்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். இதில், இந்தியா அணியில் எப்படி போலி ஊக்கமருந்து ஊசி பயன்படுத்தப்படுகிறது; சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையேயான தகராறின் உண்மையான காரணம்; அணியில் இருந்து வீரர்களை நீக்குவதற்கு யார் காரணம் போன்ற விவரங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023 தொடருக்கு முன்பே சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! ரசிகர்கள் அதிர்ச்சி
Zee Media-வின் உளவு கேமராவில் சிக்கிய சேத்தன் சர்மாவின் கருத்துகள் பிசிசிஐயை மட்டுமல்ல, ஐசிசி அமைப்பையும் ஆட்டிப்பார்க்க வாய்ப்புள்ளது. இந்த கருத்துகள் இந்திய அணியில் உள்ள சில பெரிய வீரர்களின் உண்மை முகங்கள் அம்பலமாகலாம். அவரின் கருத்துகள் கோடிக்கணக்கான கிரிக்கெட் பிரியர்களை பெரும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தலாம்.
வீரர்கள் போலியான ஊக்கமருந்து ஊசிகளை எடுத்துக்கொள்வதாகவும், பெரிய நட்சத்திர வீரர்களின் உட்செலுத்தப்பட்ட ஊக்கமருந்துகளை பிசிசிஐ வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் சேத்தன் சர்மா தெரிவித்தார். சௌரவ் கங்குலிக்கும் விராட் கோலிக்கும் இடையிலான சண்டையின் பின்னணியில் உள்ள உண்மையையும் அவர் வெளிப்படுத்தினார். கூடுதலாக, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற பலருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர்கள், தலைமை தேர்வாளரிடம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தி தங்களுக்கு வேண்டிய வீரர்களை மட்டும் அணியில் எடுக்கிறார்கள் என்பதையும் அவர் கூறியுள்ளார்.
Zee Media-வின் ஸ்பை கேமராவில், பிசிசிஐ தலைமை அணி தேர்வாளரான சேத்தன் சர்மா வெளியிட்ட தகவல்கள் போலி ஊக்கமருந்து ஊசி ஈடுபடும் வீரர்களை அம்பலப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் தலைமை தேர்வாளரால் இதைத் தெரிந்தும் ஏன் தடுக்க முடியவில்லை. கிரிக்கெட் உலகையே அசைத்து பார்க்கும் வகையில், வெளியாகியுள்ள இந்த தகவல்கள், டிவி வரலாற்றில் இது மிகப்பெரிய திருப்புமுனையாகும். மேலும் இதுபோன்ற உண்மைகள் பிசிசிஐ மூலம் அம்பலப்படுவது இதுவே முதல் முறை. Zee Media-வின் உளவு கேமராவின் மூலம் வெளியான தகவல்கள் குறித்த முழு தகவலும் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும்
மேலும் படிக்க | 'நான் போஸ்ட் போடவே இல்லை'... காதலர் தினத்தில் கடுப்பான இந்திய வீரர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ