BCCI Hiked Salary of Virat Kohli & Rohit Sahrma News: ஐபிஎல் 2024 முடிந்த பிறகு இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் ஒரு தொடரில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கு கூடுதல் போனஸ் சம்பளமும் வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சில இந்திய அணியின் வீரர்கள் தங்களை காயம் ஏற்படாமல் பார்த்து கொள்ள ரஞ்சி கோப்பையை புறக்கணித்ததாக புகார்கள் பிசிசிஐக்கு வந்தது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்து இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | INDvsENG: ஒழுங்கா ஆடல தம்பி நீ வெளியே போ.. ! இளம் வீரருக்கு பதிலாக ஆடும் படிக்கல்


இந்திய அணியில் முக்கிய வீரர்களாக இருந்து வரும் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் ரஞ்சி கோப்பை விளையாடாமல் தவிர்த்து வருகின்றனர்.  பிசிசிஐ உத்தரவையும் மீறி இஷான் கிஷன் தனது சொந்த அணியான ஜார்கண்டிற்கான ரஞ்சி போட்டிகளில் விளையாடவில்லை.  மாறாக ஹர்திக் பாண்டியாவுடன் டி20 போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.  காயத்தில் இருந்த குணமான ஷ்ரேயாஸ் ஐயரும் இதே போல ரஞ்சி போட்டிகளை தவிர்த்து வந்தார்.  தற்போது ஏற்பட்ட பல அழுத்தங்களுக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை அரை இறுதியில் விளையாட உள்ளார்.


கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து தானே விலகுவதாக இஷான் கிஷன் அறிவித்து இருந்தார்.  உலக கோப்பை தொடரில் விளையாடியதன் காரணமாக தனக்கு மன ரீதியாக ஓய்வு தேவை என்று கேட்டு கொண்டு இருந்தார். ஆனால் இஷான் தன்னை அணியில் எடுக்காமல் பெஞ்ச் செய்யப்பட்டதால் தொடரில் இருந்து விலகியதாக பின்னால் தகவல் வெளியானது.  இந்த தொடருக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இவரது பெயர் இடம் பெறவில்லை.  தற்போது ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை அணிக்காக விளையாட உள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸை அணிக்காக விளையாட உள்ளார்.


ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு வீரர்களின் புதிய சம்பள விவரங்களை பிசிசிஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் இந்திய வீரர்கள் போட்டி சம்பளமாக ரூ.15 லட்சம் பெற்று வருகின்றனர்.  இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் கடந்த 2016ல் இரு மடங்காக உயர்த்தப்பட்டது.  மேலும் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒருநாள் போட்டியில் விளையாட ரூ.6 லட்சம் சம்பளமும், டி20க்கு ரூ.3 லட்சமும் கொடுக்கப்பட்டு வருகிறது.  இந்த ஒவ்வொரு போட்டிக் கட்டணத்தைத் தவிர, சில வீரர்கள் பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தத்திலும் உள்ளனர்.  கிரேடு படி அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.  


பிசிசிஐ டெஸ்ட் வீரர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க உள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்க்கும் வீரர்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய செய்தியை அனுப்பி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற பிறகு பேசிய ரோஹித், "விளையாட வேண்டும் என்று பசி உள்ள வீரர்கள், இங்கே தன்னை நிரூபிக்க நினைக்கும் வீரர்கள், மேலும் கடினமான சூழ்நிலையில் விளையாடுபவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம். டெஸ்ட் தொடரை மதிப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்" என்று ரோஹித் கூறி இருந்தார்.  இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா 3-1 என்று வென்றுள்ளது.  கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் தொடங்குகிறது.


மேலும் படிக்க | IPL 2024: ஐபிஎல் 2024 டிக்கெட்களை ஆன்லைனில் புக் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ