Royal Challengers Bangalore: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல்லின் முதன் சீசன் தொடங்கிய 2008 முதல் இந்த தொடரில் விளையாடி வருகிறது. சென்னை, மும்பை அணிகளுக்கு அடுத்து அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணி ஆர்சிபி தான், ஆனால் 16 சீசன்களாக ஒரு கோப்பையை கூட வென்றதில்லை. பெங்களூருவை மையமாக கொண்ட ஆர்சிபி அணியானது, இதுவரை மூன்று இறுதிப் போட்டிகளில் விளையாடி மூன்று முறையும் தோல்வியை சந்தித்துள்ளது. 2009ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்தனர். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் கழித்து, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸிடம் அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது ஆர்சிபி.
அதன் பின்பு, 2016 ஆம் ஆண்டு விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி. ஆனால் அந்த ஆண்டு மீண்டும் டேவிட் வார்னரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. அதன் பின்பு, தற்போது வரை ஆர்சிபி இறுதி போட்டிக்கு முன்னேறியது இல்லை. கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்சிபி அணியை இதனை வைத்து கேலி செய்து வருவது வழக்கம். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விட்டு வெளியேறியதும் சில வீரர்கள் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டில், குயின்டன் டி காக் ஆர்சிபியை விட்டு வெளியேறிய பிறகு மும்பை அணியில் இணைந்து ஐபிஎல் கோப்பையை வென்றார். இந்நிலையில், ஆர்சிபியை விட்டு வெளியேறிய பிறகு ஐபிஎல் கோப்பையை வென்ற வீரர்களை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | அரைசதம் அடித்ததும் சல்யூட் செய்யும் துருவ் ஜூரல்! பின்னால் இருக்கும் காரணம்!
யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 2014 ஆம் ஆண்டு தொடரில் விளையாடினார். அந்த சமயத்தில் அதிக விலை போன வீரராக யுவராஜ் இருந்தார். ஆர்சிபி அணி இவரை ரூ. 14 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் அதன் பிறகு ஆர்சிபி அவரை கைவிட்டது. பிறகு யுவராஜ் 2015 ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2016ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் இணைந்தார். அதன் வருடம் ஐபிஎல் கோப்பையை வென்றது டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி. அதன் பிறகு 2019ல் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஐபிஎல் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பகுதியாக இருந்தார் யுவராஜ்.
குயின்டன் டி காக்
ஐபிஎல் 2018 மெகா ஏலத்தில் குயின்டன் டி காக் ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டார். ஆனால் ஐபிஎல் 2019க்கு முன் அவரை மும்பை இந்தியன்ஸுக்கு டிரேட் செய்தது ஆர்சிபி. பின்பு, 2019 மற்றும் 2020ம் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார் குயின்டன் டி காக். தற்போது டி காக் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன் ஐபிஎல் 2016 ஏலத்தில் ரூ 9.5 கோடிக்கு ஆர்சிபியால் எடுக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அதன் பின்பு, நட்சத்திர ஆல்ரவுண்டர் வாட்சன் 2018ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 4 கோடிக்கு எடுக்கப்பட்டார். அந்த ஆண்டு சென்னை அணி பைனல் போட்டிக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பரபரப்பான இறுதி போட்டியில் சதம் அடித்து சென்னை அணிக்கு கோப்பையை பெற்று தந்தார்.
பார்த்தீவ் படேல்
பார்த்திவ் படேல் ஆர்சிபி அணிக்காக இரண்டு முறை விளையாடினார். முதன் முதலில் 2014ல் அணியுடன் இணைந்தார். பின்பு, ஐபிஎல் 2015 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறினார். அந்த சமயத்தில் மும்பை அணி கோப்பையை வென்று இருந்தது. பிறகு ஐபிஎல் 2018 மெகா ஏலத்தில் மீண்டும் ஆர்சிபி அணிக்காக விளையாடினார் பார்திவ். ஐபிஎல் 2020க்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
ஜாக் காலிஸ்
ஜாக் காலிஸ் ஐபிஎல் 2008 முதல் 2010 வரை ஆர்சிபி அணியில் இருந்தார். ஐபிஎல் 2009 இறுதிப் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி தோல்வியடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2011ல் காலிஸை தங்கள் அணிக்கு வாங்கியது. கேகேஆர் அணியில் காலிஸ் இரண்டு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும் படிக்க | IND vs ENG: இந்திய அணி வெற்றிக்கு... விராட் கோலியின் முதல் ரியாக்சன் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ