இந்திய ஆல்பைன் பனிச்சறுக்கு வீரர் முகமது ஆரிப் கானின் ஒலிம்பிக் பதக்கக் கனவு கானல்நீரானது. தற்போது சீனாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஸ்லாலோம் போட்டியில் இன்று (2022, பிப்ரவரி 16, புதன்கிழமை) ஆரிஃப் கான் வெளியேறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரிஃப் கான் தனது முதல் ஓட்டத்தை யாங்கிங் நேஷனல் ஆல்பைன் ஸ்கீயிங் மையத்தில் முடிக்கத் தவறிவிட்டார், இதனால் அவரால் இரண்டாவது ஓட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.


ஆஸ்திரியாவின் ஜோஹன்னஸ் ஸ்ட்ரோல்ஸ் 53.92 வினாடிகளில் ரன் 1 க்குப் பிறகு பந்தயத்தில் முன்னிலை வகித்தார். ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில், ஆண்கள் ஸ்லாலோம் போட்டியில் பங்கேற்ற 89 பேரில் 45வது இடத்தைப் பிடித்தார் ஆரிஃப் கான்.


மேலும் படிக்க | பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஆரிப் கான்


பிப்ரவரி 4 தொடங்கி 20ம் தேதி வரை பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளுக்காக முதல் முறையாக நூறு சதவீத செயற்கை பனி உருவாக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி 13ம் தேதியன்று நடைபெற்ற போட்டியில் பதக்கத்தை தவறவிட்ட ஆரிப் கான், இன்றைய போட்டியிலும் வெற்றி பெறவில்லை.


இந்தியாவின் சார்பில் கலந்துக்கொண்ட ஒற்றை வீரரும் வெற்றி பெறாததால், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கக் கனவு கானல் நீரானது.


மேலும் படிக்க | பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விழாக்களை புறக்கணிக்கும் இந்தியா


கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பங்கேற்ற ராணுவ வீரரை ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வரச் செய்ததை கண்டித்த இந்தியா, இதனால், ஒலிம்பிக் விழாவின் நிகழ்ச்சிகளை இந்திய பிரதிநிதிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நார்வே, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் பதக்க பட்டியலில் முதல் மூன்றிடங்களை பிடித்துள்ளன.


பல இடையூறுகளுக்கும், தடைகளுக்கும் நோய்த்தொற்று பரவலுக்கும் மத்தியில் போட்டிகளை நடத்தி வரும் சீனா, பதக்கப் பட்டியலில் ஆறாமிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு பட்டியலில் எந்த இடமும் கிடைக்கவில்லை.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR