புதுடெல்லி: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க அல்லது நிறைவு விழாவில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (பிப்ரவரி 3) அறிவித்துள்ளது.
"ஒலிம்பிக்ஸை அரசியலாக்க சீனா முடிவு செய்திருப்பது வருத்தமளிக்கிறது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க அல்லது நிறைவு விழாவில் இந்தியா கலந்து கொள்ளாது" என, இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் கால்வான் சிப்பாயை சீனா தீப்பந்தம் ஏந்தி வருபவராக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அறிக்கை அளித்தார். "ஒலிம்பிக்ஸை அரசியலாக்க சீனா தேர்வு செய்துள்ளது வருத்தமளிக்கிறது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க அல்லது நிறைவு விழாவில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார்" என்று அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
Regrettable that China has chosen to politicise the Olympics. The Indian envoy will not attend the opening or closing ceremony of the Beijing Winter Olympics: MEA on reports of China making Galwan soldier torchbearer pic.twitter.com/AdtDVk3aSv
— ANI (@ANI) February 3, 2022
கால்வான் மோதலின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் படைப்பிரிவு தளபதி, புதன்கிழமை (பிப்ரவரி 2) பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் ஜோதியை ஏற்றினார்.
ஜூன் 15, 2020 அன்று கால்வான் பள்ளத்தாக்கு எல்லை மோதலின் போது தலையில் பலத்த காயம் அடைந்தவர் சீனாவின் ரெஜிமென்ட் கமாண்டர் குய் ஃபபாவோ.
ALSO READ | பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஆரிப் கான்
அவர் குளிர்கால ஒலிம்பிக் பூங்காவில், சீனாவின் நான்கு முறை ஒலிம்பிக் ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியனிடமிருந்து ஒலிம்பிக் சுடரைப் பெற்றதாக சீனாவின் தேசிய ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தனக்கு ஏற்பட்ட சேதங்களை மறைத்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுடன் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் நான்கு வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்திருந்தது.
ஆனால், அதன் பாதிப்பு, அந்நாடு அறிவித்ததை விட குறைந்தது ஒன்பது மடங்கு அதிகமாக இருக்கும் என ஒரு புலனாய்வு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், கால்வான் பள்ளத்தாக்கு தொடர்பான ஒரு சர்ச்சையை, விளையாட்டுப் போட்டிகளில் சீனா முன்னெடுத்துள்ளதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
ALSO READ | U19 WC அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்திய அணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR