Chennai Super Kings Latest Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) தற்போது இக்கட்டான சூழலில் இருக்கிறது. மகேந்திர சிங் தோனிக்கு (Mahendra Singh Dhoni) இதுதான் கடைசி சீசன் என கூறப்படுகிறது, அடுத்தாண்டு ஐபிஎல் மெகா ஏலமும் இருப்பதால் நிச்சயம் தோனிக்கு இந்த தொடருடன் வீரராக ஓய்வு பெறவே அதிக வாய்ப்புள்ளது. நடப்பு தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸி பொறுப்பை கவனித்து வரும் சூழலில், அவர் தோனியை கோப்பையுடன் வழியனுப்பவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் அனைவரிடமும் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, நடப்பு தொடரில் வெற்றியுடன் ஆரம்பித்த சிஎஸ்கே அணி (CSK) அடுத்தடுத்து 2 தோல்விகளால் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் மும்பை அணியை வான்கடேவில் வீழ்த்தியதால் சற்று நம்பிக்கையுடன் இருந்தாலும் லக்னோ அணியிடம் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்து தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது. 8 போட்டிகளை விளையாடிவிட்ட நிலையில் இன்னும் 6 லீக் போட்டிகள் சிஎஸ்கே அணிக்கு உள்ளது. இதில் 3 போட்டிகள் சென்னை சேப்பாக்கத்திலும், 3 போட்டிகள் சென்னைக்கு வெளியேவும் உள்ளது. 


சேப்பாக்கத்தில் சொங்கியான சிஎஸ்கே


சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டியில் அசுர பலத்துடன் காணப்படும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டிக்கு முன் வரை சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்துவது கடினம் என பலரும் கூறிவந்த நிலையில், ஸ்டாய்னிஸின் ஆட்டம் அனைத்தையும் தலைகீழாக புரட்டிவிட்டது. 


சிஎஸ்கே அணி பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி பல ஓட்டைகள் உள்ளது. அந்த வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கேவின் பேட்டிங்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இதில் காணலாம். 


மேலும் படிக்க | SRH vs RCB: சன்ரைசர்ஸ் அணியின் விஸ்பரூபத்துக்கு விடை கொடுக்குமா ஆர்சிபி?


ஓப்பனிங்கில் இவர்கள் தான்...


சிஎஸ்கே அணி ஓப்பனிங்கில் பெரிய மாற்றத்தை செய்யவே வேண்டாம். நடப்பு தொடரில் தொடங்கியது போலவே ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா ஆகியோரையே முயற்சித்துப் பார்க்கலாம். ரஹானேவுக்கு (Ajinkya Rahane) சிறிய காயம் இருப்பதால் அவரை ஓப்பனிங்கில் இறக்குவதாக கூறவது இனி சரப்படாது. நீண்ட ஓய்வு தற்போது இருப்பதால் அவர் உடற்தேர்ச்சி அடைந்துவிட்டால் 3வது பேட்டராக மட்டுமே அவரை களமிறக்க வேண்டும். இல்லையெனில் ரஹானே வெளியே அமரவைக்கப்பட்டு சமீர் ரிஸ்வியை (Sameer Rizvi) நீங்கள் மிடிலில் ஆடலாம். 


மிட்செல் வேண்டவே வேண்டாம்...


ரஹானே வெளியே அமரவைக்கப்பட்டால் யார் மூன்றாவது இறங்குவது என்ற கேள்வி வரலாம். மும்பை அணி (Mumbai Indians) சூர்யகுமாரை பயன்படுத்துவதை போல் 3வது பேட்டராக சிவம் தூபேவை (Shivam Dube) சிஎஸ்கே பயன்படுத்தலாம். இல்லையெனில், டேரில் மிட்செலை வெளியே வைத்துவிட்டு மொயின் அலிக்கு அந்த இடத்தில் வாய்ப்பிளிக்கலாம். டேரில் மிட்செல் (Daryl Mitchell) தற்போது சுத்தமாக ஃபார்மில் இல்லை என்பது தெரிகிறது. எனவே மிட்செலுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்குவது அவசியமற்றது. மிடில் ஆர்டரை தூபே - மொயின் - ரிஸ்வி - ஜடேஜா ஆகியோரை கொண்டு பலமாக்கலாம். பின்வரிசையில் தோனி, ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் கைக்கொடுப்பார்கள்.


இதுதான் சரியான காம்பினேஷன்


ரிஸ்வியை அணியில் எடுக்க தயக்கம் இருந்தால் ரஹானே உடன்தான் சிஎஸ்கே விளையாடியாக வேண்டும், அதுவும் அவரை 3வது பேட்டராக களமிறக்க வேண்டும். இந்த காம்பினேஷன் சிஎஸ்கேவுக்கு ரைட் - லெஃப்ட் என்ற முறையிலும் கைக்கொடுக்கும், சீராக ரன்களை குறைக்கவும் உதவும். கடந்த சில போட்டிகளை போல ஓடிஐ இன்னிங்ஸ் விளையாடும் மிட்செல், ஜடேஜாவை தொடக்கக் கட்ட ஓவர்களில் விளையாட வைப்பது விஷப்பரீட்சை. குறிப்பாக டெத் ஓவர்களில் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோர் எஸ்ஆர்ஹெச் அணியின் பலமாக இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தில் தள்ள மிடில் ஓவரிலேயே ஸ்பின்னர்களை தூபே அட்டாக் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | 20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணியில் 3 பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ