World Cup Astrological Predictions: 13ஆவது ஐசிசி உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா அணி வென்றது. இது அந்த அணிக்கு 6ஆவது உலகக் கோப்பையாகும். இதற்கு முன் 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிக்கு முன் பல மூத்த கிரிக்கெட் வீரர்களும் தங்களின் கணிப்பை தெரிவித்தனர். இந்தியாவுக்கு சொந்த மண் என்பதால் கூடுதல் சாதகம் இருப்பதாக பலரும் கணித்தனர். ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக இருப்பதாகவும் கூறினர். ஆனால், இறுதிப்போட்டி இவை எதுவும் பலிக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர்தான் போட்டியை வென்று கொடுத்தது, ஆட்டச் சூழலை இந்தியா சரியாக அணுகாததும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 


இவையெல்லாம் போட்டி குறித்து கணிப்புதான் என்பதால், இவை பலிக்கவில்லை என்றாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியும். அன்றைய தினத்தில் நடக்கும் நிகழ்வுகள் சூழலை எப்படி வேண்டுமானாலும் மாற்ற வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் உலகக் கோப்பை குறித்து பல ஜோதிடர்களும் தங்களின் கணிப்பை தெரிவித்திருந்தனர்.


மேலும் படிக்க | இனி இந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடமில்லை... இறுதிப்போட்டிக்கு பின் எதிர்காலம் என்ன?


குறிப்பாக, உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ தனது கணிப்பை தெரிவித்திருந்தார். அவர் தனது கணிப்பில் 1987ஆம் ஆண்டு பிறந்த கேப்டன்தான் கோப்பையை வெல்வார் என கூறியிருந்தார். அதாவது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹாசன் ஆகியோர்தான் 1987ஆம் ஆண்டு பிறந்தவர்கள். இதில், ஷகிப்பிற்கு வாய்ப்பு குறைவு என்றும் ரோஹித் சர்மாதான் கோப்பையை தூக்குவார் எனவும் கணித்தார். ஆனால் கோப்பையை வென்ற பாட் கம்மின்ஸ் 1993ஆம் ஆண்டில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மற்றொரு பிரபல ஜோதிடர் பண்டிட் ஜகன்னாத் குருஜி என்பவர் இறுதிப்போட்டிக்கு முன் தனது கணிப்பை தெரிவித்திருந்தார். அவர் தனது கணிப்பில், "இந்த உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் ஜாதகம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இது அவரது தலைமைத்துவத் திறமைக்கு உதவியது. மேலும், ரோஹித்தின் கிரக நிலைகளும் சீரமைப்பும், 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனிக்கு இருந்ததை போலவே இருக்கிறது. எனவே, இறுதிப்போட்டியை வென்று உலகக் கோப்பையை அவர் தனக்காகவும் அணிக்காகவும் பெற்றுத் தருவார்" என்றார்.



உதாரணத்திற்கு கூறிய இந்த இரண்டு கணிப்புகளும் கூட பலிக்கவில்லை. பெரும்பாலானோர் இந்தியா வெற்றி பெறும் என்றே கணித்தனர். அந்த வகையில், தற்போது இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பின் ரசிகர்கள் பலரும் இந்தியா ஜெயிக்கும் என கணித்த ஜோசியர்களை சமூக வலைதளங்களில் திட்டித்தீர்த்து வருகின்றனர். 



குறிப்பாக, க்ரீன்ஸ்டோன் லோபோ நேற்று இந்திய அணிக்கு ஆதரவளித்து போட்ட பதிவில் சில ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர். குறிப்பாக ஒரு பயனர்,"உங்களைச் சந்தித்து என் வாழ்க்கையைப் பற்றிய ஜோதிட ஆலோசனைகளைப் பெற விரும்புகிறேன். அதனால், நீங்கள் என்ன சொன்னாலும் நடக்காது என்று எனக்குத் தெரியும்" என பதிவிட்டு நகைத்துள்ளார். மேலும் ஒருவர்,"இப்போது நம்பிக்கையே இல்லை, ஜோதிடமே இல்லை. ஜோதிடர்களிடம் இருந்து விலகி இருக்க என் பெற்றோரிடம் சொல்வேன்" என பதிவிட்டுள்ளார்.



மேலும் படிக்க | உலக கோப்பை: 6வது முறையாக மகுடம் சூடிய ஆஸ்திரேலியா - இந்தியாவின் கனவு தகர்ந்தது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ