Hardik Pandya Injury: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில்  இருக்கிறது. இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் அந்த அணியை கவலைக்கொள்ள வைக்கும் சம்பவம் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நிகழ்ந்தது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு (Hardik Pandya) அந்த போட்டியில் காயம் ஏற்பட்டது. முதற்கட்டமாக, அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டதில் சிறிய சுளுக்குதான் என்றும் தீவிரமான காயம் ஏதுமில்லை என்றும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து, அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு லண்டனில் இருந்து வரவைக்கப்பட்ட மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார். 


புதிய தகவல்


அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாத நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவார் என முதலில் தகவல்கள் வெளியாகின. அடுத்து இந்திய அணி (Team India) 29ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் லக்னோவில் மோதுகிறது. இதற்கு நடுவே, ஒரு வாரம் இடைவேளை இருந்ததால் அவர் அடுத்த போட்டிக்குள் தயாராகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அடுத்து இரு போட்டிகளில் விளையாட மாட்டார் என நேற்று தகவல்கள் வெளியானது.


மேலும் படிக்க | இந்தியாவின் முதல் தோல்வி இவரால் வரலாம்...! என்ன செய்யப்போகிறார் ரோஹித் சர்மா?


அந்த வகையில், அவரின் காயம் குறித்து (Hardik Pandya Injury Status) தற்போது தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவின் கணுக்காலில் தசைநார் கிழிந்திருக்கலாம் (Ligament Tear) என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அளித்த தகவலின்படி, ஹர்திக் பாண்டியாவின் காயம் முதலில் கண்டறியப்பட்டதை விட சற்று தீவிரமானது என தெரிகிறது.


2 வாரங்கள் ஆகலாம்


மேலும் ஹர்திக் பாண்டியா தேசிய கிரிக்கெட் அகாடமியில் நிதின் படேல் தலைமையிலான மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார் என்று கூறிய அவர், ஹர்திக் பாண்டியா கணுக்காலில் சிறிய அளவில் தசைநார் கிழிவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகத்தை வெளிப்படுத்தினார். மேலும், இந்த தசைநார் கிழிவில் இருந்து முழுமையாக குணமடைய சுமார் 2 வாரங்கள் எடுக்கும் என்றார். அதுமட்டுமின்றி, காயம் முழுமையாக குணமடைந்தால் மட்டுமே அகடாமியில் இருந்து விடுவிக்கப்படுவார் எனவும், விரைவில் குணமடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 


அவரின் கால் மேலும் பலவீனமடைந்தால் அவர் குணமடைய நீண்ட நாள் ஆகலாம் என்றும் தேவைப்பட்டால், ஊசியை போட்டுக்கொண்டு தொடரின் கடைசி கட்டத்தில் விளையாடவும் ஹர்திக் பாண்டியா தயாராக இருப்பதாகவும் அந்த பிசிசிஐ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் பழையபடி பந்துவீசவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பலனளிக்காது என்பதே நிதர்சனமானது.


மாற்று வீரர்...?


எனவே, இந்திய அணி அவர் குணமடைந்து வரும் வரை காத்திருக்கும் என்றும் அவருக்கான மாற்று வீரர் தேவையில்லை என்றும் முடிவெடுத்துள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) (அ) இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள். பந்துவீச்சில் ஷர்துலுக்கு பதில் ஷமி இனி அனைத்து போட்டிகளிலும் இடம்பெறுவார் என தெரிகிறது. ஒருவேளை சிராஜூக்கு ஓய்வளிக்கப்பட்டால் அஸ்வின் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக உள்ளே வரலாம் என தெரிகிறது.


எத்தனை போட்டிகளை தவறவிடுவார்?


மேலும், ஹர்திக் பாண்டியாவின் காயம குறித்து காணும்போது அவர் அடுத்த இங்கிலாந்து (IND vs ENG), இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று முக்கிய போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. நவ.12ஆம் தேதி நடைபெறும் இந்தியா - நெதர்லாந்து போட்டியிலோ அல்லது அரையிறுதி ஆட்டத்திலோ அவர் நேரடியாக விளையாடுவார் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | World Cup 2023: “உலக கோப்பை போலி டிக்கெட்” கவனமாக இருங்கள்! உங்களை குறிவைக்கும் மோசடி கும்பல்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ