Latest Cricket News: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றியை பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இது இந்திய அணிக்கு எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்பதை இங்கு காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரிக்கெட் உலகமே தற்போது பரபரப்பாக கட்டத்தில் இருக்கிறது எனலாம். கடந்த நான்கு நாள்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கேட்டால் காலை 4.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணிவரை ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியையும், மதியம் 1.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியையும் தொடர்ந்து பார்த்து வந்தனர்.


WTC இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா


அந்தளவிற்கு கிரிக்கெட்டில் தற்போது டெஸ்ட் சீசன் உச்சத்தில் இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் இன்னும் 1 போட்டியும், தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் தொடரில் இன்னும் 1 போட்டியும், ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை தொடரில் இரண்டு போட்டிகளும் என மொத்தம் 4 போட்டிகள் மட்டுமே இந்த சீசனில் இன்னும் மீதம் இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட் சீசன் நிறைவடைய உள்ளது.


எனவே, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் இருந்து வந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டி பந்தயத்தில் இருந்த நிலையில், தற்போது முதல் அணியாக WTC இறுதிப்போட்டிக்கும் தென்னாப்பிரிக்கா தகுதிபெற்றுள்ளது. பாகிஸ்தான் உடனான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக WTC இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.


மேலும் படிக்க | மெல்போர்ன் டெஸ்ட் : இந்திய அணி வெற்றி பெறுமா? இதுவரை அதிகபட்ச சேஸ் இதுதான்..!


தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி


148 ரன்கள் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்கா அணி துரத்தியது. நேற்று 27 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், டெம்பா பவுமா - மார்க்ரம் ஆகியோர் நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தார்கள். இந்த ஜோடி 15 ஓவர்களுக்கு மேலாக தாக்குபிடித்து மெதுவாக இலக்கை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது மார்க்ரம் 37 ரன்களுக்கும், பவுமா 40 ரன்களுக்கும் அவுட்டான பின்னர் தென்னாப்பிரிக்கா பெரும் தடுமாற்றத்திற்கு ஆளானது. 


அதாவது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 96 ரன்களில் இருந்தபோது 5ஆவது விக்கெட்டாக டெம்பா பவுமா ஆட்டமிழந்தார். அதன் பின் கைல் வெர்ரின்னே 2, டேவிட் பெடிங்காம் 14, கார்பின் போஷ் 0 என வரிசையாக ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா 99 ரன்களிலேயே 8 விக்கெட்டை இழந்து தடுமாறியது. கையில் 2 விக்கெட்டுகள் இருக்க 49 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரபாடாவும் யான்சனும் 10ஆவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 


தென்னாப்பிரிக்காவின் சரிவுக்கு முக்கிய காரணம், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அப்பாஸ் ஆவார். டோனி டி ஸோர்ஸி, எய்டன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா, டேவிட் பெடிங்காம், கார்பின் போஷ் என 6 பேரையும் அப்பாஸ் தான் ஆட்டமிழக்கச் செய்தார். அப்பிடியிருக்க, இனி நிதானம் காட்டினால் சரிபடாது என முடிவெடுத்த இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர்.


மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவின் சாம் கான்ஸ்டாஸ் ஐபிஎல்லில் எந்த அணியில் விளையாடுகிறார் தெரியுமா?


இந்திய அணிக்கு பெரிய ஆப்பு


இந்த ஜோடி 8 ஓவர்கள் இணைந்து பேட்டிங் செய்து, 49 ரன்களை வெற்றிகரமாக அடித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றியின் மூலம் அவர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். பாகிஸ்தான் உடனான அடுத்த போட்டியில் அவர்கள் தோற்றாலும், டிரா செய்தாலும் கூட புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு போகவே அதிக வாய்ப்புள்ளதால் ஜூன் மாதம் நடைபெறும் WTC பைனலில் தென்னாப்பிரிக்கா விளையாடுவது உறுதியாகிவிட்டது. எனவே, இனி இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளில் ஏதாவது ஒரு அணி மட்டுமே இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும். 


அந்த வகையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் நாளைய கடைசி நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பை எட்டியுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெறும்பட்சத்தில் ஏறத்தாழ WTC பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் எனலாம். ஒருவேளை இந்த போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய அணிக்கு பெரிய பிரச்னை ஏற்படும். இந்த போட்டியில் தோற்றால் அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என கட்டாயமும் நெருக்கடியும் ஏற்படும். 


இந்திய அணி இந்த போட்டியை வென்று அடுத்த போட்டியில் தோற்றால் கூட தொடரை இந்திய அணி டிரா செய்யும். அப்படியிருக்க ஆஸ்திரேலியா - இலங்கை தொடரில் இலங்கை அணி குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது ஆஸ்திரேலியாவை டிரா செய்தாலே WTC பைனல் வாய்ப்பு இந்தியாவின் பக்கம் வரும். இந்தியா இந்த போட்டியையும், அடுத்த போட்டியையும் தோற்றால் அப்படியே ரேஸில் இருந்து வெளியேறிவிடும். தென்னாப்பிரிக்கா உடன் ஆஸ்திரேலியா WTC பைனலில் மோதும். எனவே, இந்திய அணி தற்போது பெரிய இக்கட்டான நிலையில் இருக்கிறது.


மேலும் படிக்க | ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? மௌனம் கலைத்த பிசிசிஐ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ