IND vs SL 3rd ODI Latest News Updates: 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகளை விளையாட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஜூலை 27ஆம் தேதி தொடங்கிய டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு திரும்புவதால் ஓடிஐ தொடர் மீதும் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுமட்டுமின்றி கௌதம் கம்பீர் (Gautam Gambhir) தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி விளையாடும் முதல் சுற்றுப்பயணம் என்பதாலும் இலங்கை சுற்றுப்பயணம் மீது பலரின் கவனமும் திரும்பியது. டி20 தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தாலும், ஓடிஐ தொடர் இந்தியாவுக்கு நினைத்தபடி அமையவில்லை எனலாம்.


இந்திய அணி செய்த மாற்றங்கள்


முதல் போட்டி டிராவாக, இரண்டாவது போட்டியிலோ 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்தியா தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை வெல்வதன் மூலம் கடந்த 27 ஆண்டுகளாக இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரை இழக்கமால் இருக்கும் சாதனை தக்கவைக்க இந்தியா முனைப்புடன் இருந்தது.


மேலும் படிக்க | மீண்டும் கிரிக்கெட் விளையாடும் தினேஷ் கார்த்திக்! ஓய்வு முடிவை மாற்றியுள்ளார்!


எனவே, முதல் இரண்டு போட்டிகளில், பேட்டிங்கில் காணப்பட்ட மிடில் ஓவர் சொதப்பல்களை நிவர்த்தி செய்ய கேஎல் ராகுலுக்கு இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியின் பிளேயிங் லெவனில் கேஎல் ராகுலுக்கு (KL Rahul) வாய்ப்பளிக்கவில்லை. மிடில் ஆர்டரில் இடதுகை பேட்டர் அவசியம் என்பதால் ரிஷப் பண்ட் (Rishabh Pant) அந்த இடத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம், ஆடுகளம் சுழலுக்கே அதிக சாதகமாக இருப்பதால் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு (Arshdeep Singh) ஓய்வளித்துவிட்டு, சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான ரியான் பராக்கை (Riyan Parag) இந்தியா கொண்டுவந்தது. 


இலங்கையை கட்டுப்படுத்திய ஸ்பின்னர்கள்


இலங்கை கடந்த போட்டியில் 43 ஓவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களேயே பயன்படுத்தியதால், இந்தியாவும் அதே ஆப்ஷனை கையில் எடுத்தது. ரியான் பராக் பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார் என்பதால் இந்த இரு மாற்றங்களும் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் விதமாக அமைந்தது. கம்பீர் வந்தபின்னர் பார்ட் டைம் பந்துவீச்சாளர்களை வளர்க்கும் முனைப்பில் அதிகம் ஆர்வம் செலுத்துகிறார் எனலாம். அந்த வகையில், இன்று ரியான் பராக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டத்தையும் அப்படியே பார்க்க வேண்டும்.


இந்திய அணி இன்றைய பந்துவீச்சின் போது தொடக்க ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது. அந்த நேரத்தில் ஆடுகளம் இன்று மெதுவானதை பயன்படுத்தி ரியான் பராக் அடுத்து விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு ஆறுதல் அளித்தார். 35.3 ஓவர்களில் 171 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எப்படியும் 280 ரன்களை இலங்கை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரியான் பராக்கின் அந்த ஸ்பெல் இலங்கைக்கு முட்டுக்கட்டைப் போட்டது. 50 ஓவர்கள் முடிவில் இலங்கை 248 ரன்களை எடுத்து மொத்தம் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதாவது கடைசி 87 பந்துகளில் இலங்கை அணி 77 ரன்களுக்ககு 5 விக்கெட்டுகளை இழந்தது எனலாம். 



சாம்பியன் அணியாக உருவெடுக்கும் இந்தியா


இந்திய அணிக்கு சிவம் தூபே, ரியான் பராக், அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என உலகத் தரமான ஆல்-ரவுண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். ஒருவேளை அடுத்து பாகிஸ்தானிலோ, துபாயிலோ அல்லது இலங்கையிலோ இந்திய அணி அதன் சாம்பியன் டிராபி போட்டிகளை விளையாடும்பட்சத்தில் அங்கு இவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதன் மூலம் இந்தியாவின் பேட்டிங்கும், பந்துவீச்சும் பலப்படும். இன்னும் மிடில் ஆர்டரில் பலமான வீரர்கள் சேர்ந்துவிட்டால் இந்திய அணியை வலிமையான சாம்பியன் அணியாக உருவெடுக்கும்.  


மேலும் படிக்க | இன்றுடன் அடுத்த 43 நாட்களுக்கு எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ