இன்றுடன் அடுத்த 43 நாட்களுக்கு எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லை!

India vs Sri Lanka Live: இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. தற்போது இலங்கை 1-0 என்று முன்னிலையில் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 7, 2024, 02:09 PM IST
  • இன்றுடன் ஒருநாள் போட்டிகள் இல்லை.
  • அடுத்த 43 நாட்களுக்கு எந்த போட்டியும் இல்லை.
  • முழு ஓய்வில் வீரர்கள் இருக்க உள்ளனர்.
இன்றுடன் அடுத்த 43 நாட்களுக்கு எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லை!  title=

இந்தியா கடந்த மாதம் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ரோஹித் சர்மா தலைமையிலான அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை வென்றது. பரபரப்பான இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் ஐசிசி பட்டத்தை வென்றது.   கடைசியாக 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இதன் மூலம் தோனிக்கு பிறகு ஐசிசி கோப்பையை வெல்லும் முதல் கேப்டன் என்ற பெருமையை படைத்தார் ரோஹித் சர்மா. இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அதன் பிறகு இளம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 

மேலும் படிக்க | ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா?

 

தற்போது இலங்கைக்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டியில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் சூரியகுமார் தலைமையில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. ஆனால் ஒருநாள் தொடரில் 1-0 என்று பின்தங்கி உள்ளது. இன்று நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் தொடரை சமன் செய்யும். ஒருவேளை தோல்வியடையும் பட்சத்தில் கடந்த 27 ஆண்டுகளாக இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றது இல்லை என்ற மோசமான சாதனையை இலங்கை தகர்க்கும். இன்று நடைபெறும் ஒருநாள் போட்டிக்கு பிறகு இந்த ஆண்டு முழுவதும் இந்தியா ஒருநாள் போட்டிகளில் விளையாடப்போவது இல்லை. வங்கதேசம், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது.

இதில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதே சமயம் இந்திய அணி தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இன்று நடைபெறும் இந்தியா மற்றும் இலங்கை மோதும் கடைசி ஒருநாள் போட்டி முடிந்தவுடன் அடுத்த 43 நாட்களுக்கு இந்திய அணி எந்த ஒரு தொடரிலும் விளையாடப்போவது இல்லை. ஆனால் அதன் பிறகு, அடுத்த ஆண்டு மே மாதம் வரை தொடர்ச்சியாக விளையாட உள்ளனர். பார்டர்-கவாஸ்கர் டிராபி, சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் 2025 போட்டிகள் நடைபெற உள்ளன. 

வங்கதேசத்தின் இந்திய சுற்றுப்பயணம் 2024 

இந்தியா vs வங்கதேசம், 1வது டெஸ்ட்: செப்டம்பர் 19-செப்டம்பர் 23, சென்னை 
இந்தியா vs வங்கதேசம், 2வது டெஸ்ட்: செப்டம்பர் 27-அக்டோபர் 1, கான்பூர்

இந்தியா vs வங்கதேசம், 1வது டி20: அக்டோபர் 6, தர்மசாலா 
இந்தியா vs வங்கதேசம், 2வது டி20, அக்டோபர் 9, டெல்லி 
இந்தியா vs வங்கதேசம், 3வது டி20, அக்டோபர் 12, ஹைதராபாத்

நியூசிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம் 2024 

இந்தியா vs நியூசிலாந்து, 1வது டெஸ்ட்: அக்டோபர் 16-அக்டோபர் 20, பெங்களூரு 
இந்தியா vs நியூசிலாந்து, 2வது டெஸ்ட்: அக்டோபர் 24-அக்டோபர் 28, புனே 
இந்தியா vs நியூசிலாந்து, 3வது டெஸ்ட்: நவம்பர் 1-நவம்பர் 5, மும்பை

இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் 2024 

இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 1வது டி20: நவம்பர் 8, டர்பன் 
இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2வது டி20: நவம்பர் 10, க்கெபெர்ஹா
இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 3வது டி20: நவம்பர் 13, செஞ்சுரியன் 
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 4வது டி20: நவம்பர் 16, ஜோகன்னஸ்பர்க்

இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் (பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25)

இந்தியா vs ஆஸ்திரேலியா, 1வது டெஸ்ட்: நவம்பர் 22-நவம்பர் 26, பெர்த் 
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2வது டெஸ்ட்: டிசம்பர் 6-டிசம்பர் 10, அடிலெய்டு 
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3வது டெஸ்ட்: டிசம்பர் 14-டிசம்பர் 18, பிரிஸ்பேன் 
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4வது டெஸ்ட்: டிசம்பர் 26-டிசம்பர் 30, மெல்போர்ன் 
இந்தியா vs ஆஸ்திரேலியா, 5வது டெஸ்ட்: ஜனவரி 3-ஜனவரி 7, சிட்னி

மேலும் படிக்க | இதுதான் எனது கடைசி ஒலிம்பிக் போட்டி - வினேஷ் போகத் சொன்ன முக்கிய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News