ICC World Cup SA vs SL: உலகக் கோப்பை என்றாலே தென்னாப்பிரிக்கா அணிக்கு பல மறக்க நினைக்கும் கருப்பு நினைவுகளே நிறைந்திருக்கும். ஆனால், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்துள்ளது எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா


ஒரு முறை கூட சாம்பியனாகாவிட்டாலும், அனைவராலும் கொண்டாடப்படும் அணியாகவும், அனைவராலும் ரசிக்கப்படும் அணியாகவும் உள்ள தென்னாப்பிரிக்கா இன்றைய போட்டியில் அதனை மேலும் வலுப்படுத்தியுள்ளது எனலாம். இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்பதை தற்போது உணர்ந்திருக்கும். அந்த வகையில், தென்னாப்பிரிக்க அணி இலங்கை அணியை பந்தாடிய இந்த போட்டி குறித்தும், தென்னாப்பிரிக்காவால் படைக்கப்பட்ட இன்றைய சாதனைகளையும் இதில் காணலாம். 


முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும், அடுத்த இறங்கிய வான் டெர் டசன், மற்றொரு ஓப்பனர் டி காக் உடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தார் எனலாம். இருவரும் பவுண்டரிகளை குவித்து வந்தனர்.


மேலும் படிக்க | AFG vs BAN: எங்கே வெற்றியை கோட்டைவிட்டது ஆப்கான்? - கடைசி இடத்தில் நடப்பு சாம்பியன்


மிரட்டிய பார்ட்னர்ஷிப்கள்


இந்த ஜோடி 204 ரன்களுக்கு இரண்டாம் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. டி காக் 84 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் - வான் டெர் டசன் உடன் இணைந்து 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். சதம் அடித்த வான் டெர் டசன் 110 பந்துகளில் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 108 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.


அதன்பின் வந்த கிளாசெனும், மார்க்ரமும் இலங்கையின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். இதில் கிளாசென் 20 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 32 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்து, உலகக் கோப்பையிலேயே அதிக வேக சதத்தை அடித்து பெரும் சாதனை படைத்தார். மேலும் அவர் 54 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 


அதிகபட்ச ஸ்கோர்


மார்க்ரம் அவுட்டான பின் அதிரடியை மில்லர் கையில் எடுத்தார். அவரும் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்களை எடுத்து தென்னாப்பிரிக்கா ஒரு மாபெரும் சாதனையை பதிவு செய்தது. அதாவது, உலகக் கோப்பையில் ஒரே இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட  அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 



இதற்கு முன், ஆஸ்திரேலியா அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 417 ரன்களை குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 413 ரன்களை எடுத்து, தற்போது இந்த பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.


அதிக சதங்கள், அதிக பவுண்டரிகள்


உலகக் கோப்பை தொடரின் ஒரே இன்னிங்ஸில் மூன்று சதங்களை பதிவு செய்த அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா இந்த இன்னிங்ஸில் 45 ஃபோர்களையும், 14 சிக்ஸர்களையும் விளாசியுள்ளது. இதுதான் உலகக் கோப்பையில் ஒரு அணி ஒரே இன்னிங்ஸில் அடித்த அதிகபட்ச பவுண்டரிகளாகும்.


மோசமான பந்துவீச்சு


இலங்கை அணியில் தில்ஷன் மதுஷங்கா 2 விக்கெட்டுகளையும், பதிரானா, வெல்லலகே, ராஜிதா உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். மேலும், 10 ஓவர்களை வீசி பதிரானா 95 ரன்களையும், ராஜிதா 90 ரன்களையும், மதுஷங்கா 86 ரன்களையும், வெல்லலகே 81 ரன்களையும் கொடுத்தார். அதுமட்டுமின்றி, இலங்கை பந்துவீச்சாளர்கள் 23 எக்ஸ்ட்ராஸையும் வீசியுள்ளனர். என்பதை கவனிக்க வேண்டும்.


மேலும் படிக்க | இந்தியா - ஆஸ்திரேலியா: இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா போட்ட ஸ்கெட்ச்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ