India National Cricket Team: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் கடந்த நவம்பர் 22ஆம் தேதி தொடங்கியது. 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி, பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணி Prime Minister's XI அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோத உள்ளது. இந்த பயிற்சி ஆட்டமும் கான்பெர்ரா நகரில் நவ. 30 மற்றும் டிச. 1 ஆகிய இரண்டு நாட்கள் பகலிரவு ஆட்டமாகவே நடைபெறுகிறது. 


முக்கியமான பகலிரவு ஆட்டம்


அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்த பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020-21ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது அடிலெய்ட் நகரில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மோசமான தோல்வியை சந்தித்தது. எனவே இந்த முறை அடிலெய்டில் வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த இந்திய அணி இந்த பயிற்சி ஆட்டத்தை பெரும் வாய்ப்பாக பார்க்கிறது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு ஆட்டத்தில் பலமான பிளேயிங் லெவனை கட்டமைக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.


மேலும் படிக்க | சிஎஸ்கே மேட்சுக்கு அம்பயர் செட்டிங் செய்த சீனிவாசன் - லலித் மோடி பகீர் குற்றச்சாட்டு


இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்ட நிலையில், அவருக்கு பதில் துணை கேப்டனான ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். தற்போது இந்திய அணி உடன் ரோஹித் சர்மா இணைந்துவிட்ட நிலையில் அவர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என கூறப்படுகிறது. ரோஹித் சர்மா அணிக்குள் வருவதால் கே.எல். ராகுல் ஓப்பனிங்கில் விளையாட மாட்டார் என்பதும் உறுதியாகிறது. ஒருவேளை சுப்மன் கில்லும் அணிக்குள் வரும்பட்சத்தில் ராகுல் மீண்டும் மிடில் ஆர்டருக்கு தள்ளப்படும் சூழல் உருவானது. ஆனால் தற்போது சுப்மன் கில் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.


சுப்மான் கில் விளையாட மாட்டார்...?


பெர்த் நகரில் பீல்டிங் பயிற்சியின்போது விரல் எலும்பு முறிவு காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி பேட்டர் சுப்மான் கில் முதல் போட்டியை தவற விட்டு நிலையில் தற்போது இரண்டாவது போட்டியையும் தவறுவிடுவார் என கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணி தரப்பில் தகவலின்படி,"கில் மொத்தம் 10-14 நாட்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். எனவே வரவிருக்கும் பயிற்சி ஆட்டத்திலும் அவர் விளையாட மாட்டார். எனவே தற்சமயத்தில் அவர் இரண்டாவது போட்டியிலும் விளையாட மாட்டார் என கூறலாம். நாட்கள் செல்ல செல்ல அவரது காயம் எந்த அளவுக்கு குணமாகி உள்ளது, அவரின் விரல் என்ன நிலையில் உள்ளது என்பதை பொறுத்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். விரல் சரியாகிவிட்டாலும் கூட போட்டிக்கு முன்பு நன்கு பயிற்சி எடுத்த பின்னரே அவரை மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் சேர்க்க முடியும்" என கூறப்படுகிறது. 


இந்திய அணிக்கு நல்ல செய்தி


கடந்த போட்டியில் சுப்மன் கில் இடத்தில், தேவ்தத் படிக்கல் விளையாடியனார். வரும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில்லின் நம்பர் 3 இடத்தை கேஎல் ராகுல் நிரப்புவார் என எதிர்பார்க்கலாம். கேஎல் ராகுல் ஓப்பனிங், நம்பர் 3, மற்றும் நம்பர் 6 ஆகிய இடங்களில் விளையாடக் கூடியவர். அந்த வகையில் கில்லின் காயம் இன்னும் குணமடையாமல் இருப்பது இந்திய அணிக்கு தற்போதைக்கு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது. 


ஏனென்றால் ஆஸ்திரேலிய சூழலுக்கு கேஎல் ராகுல் நன்கு பரீட்சயப்பட்டவர். ஒருவேளை அடுத்த போட்டியின் தொடக்க கட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தால் மறுமுனையில் நிதானமாக நின்று ரன்களை எடுத்து சூழலை கட்டுக்குள் வைப்பதற்கு கேஎல் ராகுல் நம்பர் 3 இடத்தில் விளையாட வேண்டும். இது இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலப்படுத்தும்.


பிளேயிங் லெவன் மாற்றம்?


தேவ்தத் படிக்கல்லின் அனுபவமின்மை காரணத்தால் அவர் அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவார். இதன் மூலம் துருவ் ஜூரேலுக்கு அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது எனலாம். கடந்த டெஸ்ட் போட்டியை போன்றே அதே பிளேயிங் லெவன்தான் அடிலெய்ட் போட்டியிலும் இருக்கும் எனலாம். ரோஹித் சர்மா உள்ளே வருவதால், தேவ்தத் படிக்கல் வெளியே அமரவைக்கப்படுவார். இந்திய அணி அஸ்வின், ஜடேஜாவுக்கு இந்த போட்டியிலும் ஓய்வு அளித்து வாஷிங்டன் சுந்தரை மட்டுமே சுழற்பந்துவீச்சாளர் பிரிவில் விளையாடும் என கூறப்படுகிறது. அதேபோல பும்ரா - முகமது சிராஜ் -  ஹர்ஷித் ராணா ஆகியோர் வேகப்பந்துவீச்சு தாக்குதலை கவனித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | ரிஷப் பண்டுக்கு சம்பளம் எவ்வளவு...? ரூ.27 கோடியும் கைக்கு வரவே வராது...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ