ICC World Cup 2023, IND vs NZ: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், 397 ரன்களை குவித்தது மிரட்டியுள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும், சுப்மான் கில் 80 ரன்களையும் எடுத்தனர். இதில், சுப்மான் கில் தசைபிடிப்பு வலி காரணமாக பாதியிலேயே வெளியேறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்த பின்னர் கடைசி ஓவரில் களமிறங்கினார். 


மேலும் படிக்க | 50வது சதமடித்தவுடன் சச்சினுக்கு தலை வணங்கிய விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் பிளையிங் கிஸ்.!


இதில் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். 29 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என அடித்து 47 ரன்களை குவித்தார். அவரின் அதிரடி தொடக்கம்தான் இந்திய அணியின் பெரிய ஸ்கோருக்கு அடிதளமாக அமைந்தது. அடுத்து கில் - கோலி பார்ட்னர்ஷிப் 93 ரன்களை குவித்தது. தொடர்ந்து, கோலி - ஷ்ரேயாஸ் ஜோடியும் 168 ரன்களை குவித்தது. விராட் கோலி வழக்கம்போல் நிதானமாக ஆரம்பித்து கடைசி கட்டத்தில் பவுண்டரிகளை பறக்கவிட்டார். 



அவர் 113 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 117 ரன்களை அடித்தார். ஆனால், மறுமுனையில் ஷ்ரேயாஸ் வேகமாக சதமடித்தார். அவர் 66 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார். அவர் 70 பந்துகளில் 4 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் கடைசி கட்டத்தில் 20 பந்துகளுக்கு 39 ரன்களை குவித்தார். நியூசிலாந்து அணி பந்துவீச்சில் சவுதி 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.


விராட் கோலி இன்று பல சாதனைகளை படைத்தார். ஒருநாள் அரங்கில் அதிகபட்ச சதத்தை (50) பதிவு செய்தார். மேலும், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை (711) குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். மேலும் ஒருநாள் அரங்கில் 3ஆவது அதிகபட்ச ரன்களை (14,734) குவித்தார். 


மேலும் படிக்க | உலக கோப்பை 2023: இந்தியா முதல் பேட்டிங், சிக்சர் மழை பொழியும் ரோகித் சர்மா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ