சுப்மான் கில்லுக்கு என்னாச்சு... அவுட் ஆகாமல் வெளியேற்றம் - மீண்டும் களத்திற்கு வருவாரா?

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் சுப்மான் கில் ரிட்டையர்ட் ஹர்ட் (Retired Hurt) முறையில் களத்தில் இருந்து வெளியேறினார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 15, 2023, 04:44 PM IST
  • ரோஹித் அதிரடியான தொடக்கத்தை அளித்தார்.
  • சுப்மான் கில் அரைசதம் கடந்தார்.
  • விராட் கோலியும் வழக்கம்போல் நிதானமாக விளையாடுகிறார்.
சுப்மான் கில்லுக்கு என்னாச்சு... அவுட் ஆகாமல் வெளியேற்றம் - மீண்டும் களத்திற்கு வருவாரா? title=

IND vs NZ Semi Final: நடப்பு ஆடவர் ஐசிசி உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், நான்காம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் இப்போட்டியில் மோதுகின்றன. 2019 உலகக் கோப்பையில் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்திதான் நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு சென்றது என்பதால் இந்த போட்டி மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. 

டாஸ் வென்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சூழலை சாதகமாக பயன்படுத்திய ரோஹித் சர்மா முதல் ஓவரில் இருந்தே அதிரடியை கைக்கொண்டார். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் குவித்து வந்த ரோஹித் சர்மா 47 ரன்களில் டிம் சவுதி பந்துவீச்சில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதுவரை ரோஹித் அதிரடியை வேடிக்கை பார்த்து, நிதானமாக ஆடி வந்த சுப்மான் கில், விராட் கோலி உடன் ஜோடி உடன் அதிரடியாக விளையாடினார்.

மேலும் படிக்க | உலகக் கோப்பை 2023: 2019 -ல் இருந்த அதே நடுவர்கள் - இந்திய அணிக்கு மோசமான செய்தி

அவரும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என அடித்து 41 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். தொடர்ந்து, விராட் கோலியும் அவருக்கு பக்கபலமாக நின்று விளையாடினார். சுப்மான் கில் 65 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 79 ரன்களுடன் இருந்த நிலையில், அவருக்கு தசை பிடிப்பு வலி ஏற்பட்டது. இதனால், அவர் களத்தில் இருந்து வெளியேறினார். அது சரியானதும் அவர் மீண்டும் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது இந்திய அணி 35 ஓவர்களில் 1 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை எடுத்துள்ளனர். விராட் கோலி 80 ரன்களுடன், ஷ்ரேயாஸ் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். விராட் கோலி சதத்தை நெருங்கி வரும் வேளையில், ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். மேலும், ஒருநாள் அரங்கில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி இன்றைய போட்டியில் தாண்டியுள்ளார். விராட் கோலி இன்றைய போட்டியில் சதம் அடித்தால் ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்தவர் என்ற மிகப்பெரும் சாதனையை விராட் கோலி படைப்பார். அவர் தற்போது 49 சதங்களுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | IND vs NZ: இப்படி செய்யலாமா? இந்திய அணிக்காக பிட்சை மாற்றிய பிசிசிஐ - ஐசிசி அதிருப்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News