India National Cricket Team: இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (IND vs ENG Test Series) விளையாடி வருகிறது. கடந்த ஜன. 25ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி நான்கு நாள்களில் நிறைவடைந்தது, அதில் இங்கிலாந்து (Team England) 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தலாக தனது வெற்றிக்கணக்கை தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்து விசாகப்பட்டினத்தில் பிப். 2ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நான்கு நாள்களில் முடிவடைந்தது. அதில் இந்திய அணி (Team India) 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதனால், எதிர்வரும் மூன்று போட்டிகளின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. 


IND vs ENG 3rd Test: நாளை முதல்...


பிப். 5ஆம் தேதியே இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில், ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணிகளுக்கும் ஓய்வு கிடைத்து. மூன்றாவது டெஸ்ட் போட்டி (IND vs ENG 3rd Test) நாளை (பிப். 15) குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் தற்போது அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.


மேலும் படிக்க | IND v ENG: முதல் முறையாக சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு! இந்திய அணியில் 4 மாற்றங்கள்!


இந்திய அணியில் ஸ்குவாடில் சில மாற்றங்கள் இருந்தது. புதிய காம்பினேஷனை கேப்டன் ரோஹித் சர்மா எப்படி வெற்றிகரமாக எடுத்துச் செல்ல இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 2ஆவது போட்டி முடிந்த உடனே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற நிலையில், சில நாள்களுக்கு முன்னரே அங்கிருந்து திரும்பினர். 


வெற்றிக்கான வியூகம்...


இரு அணிகளும் தங்களின் வெற்றிக்கான வியூகத்தை வகுத்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான டேவிட் லாய்டு பென் ஸ்டோக்ஸிற்கு (Ben Stokes) ஒரு சுவாரஸ்யமான ஐடியா ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது இந்திய அணியின் அதிரடி ஓப்பனராக உருவெடுத்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டு எடுக்கும் வழியைதான் அவர் கூறியுள்ளார். 


இதுகுறித்து டேவிட் லாய்டு (David Llyod) கூறுகையில், "ஜெய்ஸ்வால் ஒரு அதிரடி வீரர். ஆனால் அவருக்கு வெளிப்படையான பலவீனம் என குறிப்பிட்டு கூற எதுவுமில்லை. அதனால் நான் சற்றே வித்தியாசமாக யோசித்து, ஜெய்ஸ்வாலுக்கு எதிராக புதிய பந்தில் இடது கை சுழற்பந்துவீச்சாளரை பந்துவீச வைப்பதை விட, ஆட்டத்தை இன்னும் இறுக்கமான முறையில் விளையாட ஆசைப்படுவேன். அதாவது ஆஃப் ஸ்பின்னரை போட வைத்து அவரை பெரிய ஷாட்டிற்கு தூண்ட வேண்டும். ஜெய்ஸ்வாலின் ஈகோவை இங்கிலாந்து அணி சீண்டுவதை நான் பார்க்க விரும்புகிறேன்


ஜெய்ஸ்வாலுக்கு பொறி வையுங்கள்


"இந்திய துணை கண்ட சூழலில், உங்கள் கேட்சர்களை நீங்கள் பேட்டர்களை சுற்றி ஸ்லிப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் (ஜெய்ஸ்வால்) பந்தை அடிக்க விரும்பும் இடங்களில் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு பீல்டர்களை வைக்க வேண்டும். 


ஒரு டீப் மிட்விக்கெட் மற்றும் டீப் மிட்-ஆஃப் ஆகிய இடங்களில் பீல்டர்களை நிற்க வைத்து அவருக்கு முன் கேரட்டை தொங்கவிடுவதை போன்று அவருக்கு பொறி வையுங்கள். இருப்பினும், பவுண்டரிக்கு கொஞ்சம் பக்கத்தில் இருப்பதை போன்றும் பார்த்துக்கொள்ள வேண்டும். 


இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு, பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) வைத்த பொறி ஞாபகம் இருக்கிறதா... இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பவுண்டரியை நோக்கி ஒரு சிறந்த கேட்ச்சை பிடித்தாரே..." என தனது யோசனையை தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் 2ஆவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்தது, இந்தியாவின் வெற்றிக்கு சிறப்பான பங்கை வகித்தார். 


மேலும் படிக்க | பிசிசிஐ கொடுத்த அழுத்தம்! இஷான் கிஷன் எடுத்த முக்கிய முடிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ