India vs New Zealand Test Series Updates: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை (அக். 16) தொடங்குகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பெங்களூருவை தொடர்ந்து புனே மற்றும் மும்பை மாநகரில் நடைபெற உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி இந்த மூன்று போட்டியையும் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற துடிக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் நவம்பர் - டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நடைபெற இருக்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை எதிர்நோக்கி காத்திருந்தாலும் உள்நாட்டில் இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்ல கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 


IND vs NZ: இந்திய பிளேயிங் லெவன்?


பெங்களூருவில் போட்டி நடைபெறுகிறது என்பதால் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு பதில் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் பட்டேல் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். பும்ரா நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார். சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரில் ஒருவருக்குதான் நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும். சிராஜ் அனுபவ வீரர் என்றாலும் ஆகாஷ் தீப் புது பந்தில் சிறப்பாக பந்துவீசி வருவதால் அவரை ஆஸ்திரேலியா தொடருக்கு தயார்படுத்தும் விதமாக ஆகாஷ் தீப்புக்கு ரோஹித் சர்மா வாய்ப்பளிப்பார் என எதிர்பார்க்கலாம். 


மேலும் படிக்க | சிஎஸ்கேவின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்! பிராவோ இடத்திற்கு சரியானவர்!


அதேபோன்றுதான் கேஎல் ராகுலுக்கு (KL Rahul) பதில் நாளைய போட்டியில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சர்ஃபராஸ் கானுக்கு (Sarfaraz Khan) ஏன் வாய்ப்பு வழங்கப்படும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை இங்கு காணலாம். 


சர்ஃபராஸ் கான்: மூன்று முக்கிய காரணங்கள்


சர்ஃபராஸ் கானை சேர்ப்பதன் மூலம் இன்னும் மூன்று - நான்கு ஆண்டுகளுக்கு இந்திய அணியின் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஒரு பேட்டர் நிச்சயம் இடம்பெறுவார் என்பது நம்பிக்கை அளிக்கும் முதல் காரணம் ஆகும். இதனால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலம் பெறுவது மட்டுமின்றி, நீண்டகால நோக்கிலும் நன்மையாகும். 


அதுமட்டுமின்றி சர்ஃபராஸ் கான் சுழற்பந்துவீச்சை திறம்பட சமாளிக்கக் கூடியவர். ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக ரன்களை குவிப்பதில் சர்ஃபராஸ் கான் வித்தைக்காரர். எனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான சுழற்பந்துவீச்சை தாக்குவதற்கு சர்ஃபராஸ் கான் முக்கிய நபராக இருப்பார். ஒருவேளை சுப்மான் கில் தொடர்ந்து சொதப்புகிறார் என்றால் கேஎல் ராகுல் ஆஸ்திரேலியாவில் மூன்றாவது வீரராக கூட இறக்கலாம், சர்ஃபராஸ் 5, 6வது வீரராக உள்ளே வருவார். சர்ஃபராஸ் கானின் வருகையால் இந்த நெகிழ்வுத்தன்மை இந்திய அணிக்கு கிடைக்கும், இது இரண்டாவது காரணம். 


மூன்றாவது காரணம் என்னவென்றால், உள்நாட்டு தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் இன்னும் பல வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையாக இருக்கும். சர்ஃபராஸ் கானை தொடர்ந்து பலரும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவார்கள். ஐபிஎல் மோகத்தால் டெஸ்ட் போட்டிக்கான மோகம் குறைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இருந்து சர்ஃபராஸ் கானின் வருகை பல வீரர்களிடம் டெஸ்ட் போட்டி மீதான ஈர்ப்பை உண்டாக்கும்.


மேலும் படிக்க | CSK: மீண்டும் சாம்பியன் ஆக... சிஎஸ்கே குறிவைக்கும் இந்த 3 இங்கிலாந்து வீரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ