பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையான இன்று (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்தார். நிதியமைச்சரின் உரையின் போது, ​​விளையாட்டுத் துறை பற்றி குறிப்பாக கவனம் ஈர்க்கும் வகையில் எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட் 300 கோடிக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் (Commonwealth Games) தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2021-22 ஆம் ஆண்டில், விளையாட்டுக்கான பட்ஜெட் 2757.02 கோடியாக இருந்தது. டோக்கியோ 2020 மற்றும் பாராலிம்பிக்ஸ் 2020 இல் இந்திய வீரர்கள் நடத்திய சாதனைகளை தொடர்ந்து, இந்த நிதியாண்டு பட்ஜெட்டில் (Union Budget 2022) விளையாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்கீடு 3062.60 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


அதாவது கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டுக்கான விளையாட்டு பட்ஜெட் 305.58 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. முதல் முறையாக விளையாட்டுக்கென ரூ.3000 கோடிக்கும் அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் (Javelin Thrower Neeraj Chopra) தங்கப் பதக்கமும் அடங்கும்.


இந்த நிதியாண்டில் தேசிய இளைஞர் எம்பவர்மென்ட் (National Youth Empowerment) திட்டத்துக்கான வரவு செலவுத் திட்டத்தை 108 கோடியில் இருந்து 138 கோடியாக உயர்த்தவும் மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


ALSO READ | பட்ஜெட் 2022: எதன் விலை உயர்ந்தது? எது மலிவானது


கடந்த பட்ஜெட்டில் ரூ.657.71 கோடி கிடைத்த கேலோ இந்தியா (Khelo India) திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.974 கோடியாக உயர்த்தப்பட்டது.


விளையாட்டு வீரர்களுக்கான மொத்த ஊக்குவிப்பு மற்றும் விருதுகள் 245 கோடி ரூபாயில் இருந்து 357 கோடி ரூபாயாக என கணிசமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.


இந்திய விளையாட்டு ஆணையத்திற்கான பட்ஜெட் ரூ.7.41 கோடி குறைக்கப்பட்டு ரூ.653 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.


SAI என்பது தேசிய முகாம்களை நிர்வகித்தல், உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த பிற தளவாடங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவதற்கான முக்கிய அமைப்பாகும்.


தேசிய விளையாட்டு மேம்பாட்டு (National Sports Development) நிதிக்கான ஒதுக்கீடு ரூ.9 கோடி குறைக்கப்பட்டு ரூ.16 கோடியாக அறிவிக்கப்பட்டது.


தேசிய சேவைத் திட்டம் ரூ.165 கோடியிலிருந்து ரூ.283.50 கோடியாக அதாவது ரூ.118.50 கோடி உயர்ந்துள்ளது.


ALSO READ | Highlights of Budget 2022: பட்ஜெட்டின் முக்கியமான 40 ஹைலைட் அம்சங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR