World Cup 2023: 4 போட்டிகளில் தொடர் தோல்வி, அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்ல முடியுமா?
Pakistan vs South Africa Match Highlights: விறுவிறுப்பான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. 2023 உலகக் கோப்பையின் தொடர்ந்து நான்காவது போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியுமா? தெரிந்துக்கொள்ளுவோம்
Cricket News In Tamil: 2023 ஒருநாள் உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பது பாகிஸ்தானுக்கு ஒரு கனவாகவே இருந்து விடுமோ? என்ற நிலையில் பாகிஸ்தான் அணியின் செயல்திறன் இருக்கிறது. நேற்று சென்னையில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இது தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும். முன்னதாக, அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடமும் தோல்வியடைந்தது. இனி அவர்களுக்குச் செய்ய அல்லது மடி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தானின் வியூகமும், அரையிறுதிக்கு செல்லும் நம்பிக்கையும் பெரும் அடியை சந்தித்துள்ளது.
ஆட்ட நாயகன் விருது பெற்ற தப்ரைஸ் ஷம்சி
தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி (Tabraiz Shamsi) ஜோடி 10வது விக்கெட்டுக்கு 11 ரன்கள் சேர்த்தது. 48வது ஓவரில் முகமது நவாஸ் பந்துவீச்சில் தென் ஆப்பரிக்கா வீரர் கேசவ் மஹாராஜ் (Keshav Maharaj) வெற்றி பவுண்டரி அடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பரிக்கா வீரர் தப்ரைஸ் ஷம்சி, இந்த ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருதைப் (Player of the Match) பெற்றார்.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாபர் அசாம் (Babar Azam) மற்றும் சவுத் ஷகீல் ஆகியோர் அரைசதம் அடித்தனர். தென்னாப்பிரிக்கா 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. எய்டன் மார்க்ரம் 91 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி (Shaheen Afridi) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் படிக்க - பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கிறதா? இதுதான் வழி
உலகக் கோப்பை 2023 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை எட்டிய தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா இந்த ஐசிசி உலக்கோப்பை 2023 புள்ளிப்பட்டியலில் (ICC Cricket World Cup 2023 Points Table) முதல் இடத்தைப் பிடித்தது. அந்த அணி 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்றுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை நடத்தும் இந்தியாவும் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 5லும் வெற்றி பெற்று 10 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்கா சிறந்த ரன் ரேட் காரணமாக முன்னிலையில் உள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் 6 போட்டிகளில் 4 தோல்விகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணியில் செயப்பட்ட மாற்றங்கள்
பாகிஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஹசன் அலி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவருக்குப் பதிலாக முகமது வாசிம் களம் இறங்கினார். உசாமா மிர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முகமது நவாஸ்-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஷதாப் கானுக்கு பதிலாக உசாமா சேர்க்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்கா அணியில் செயப்பட்ட மாற்றங்கள்
கேப்டன் டெம்பா பவுமா (Temba Bavuma) தென்னாப்பிரிக்கா அணிக்கு மீண்டும் திரும்பினார். உடல்நிலை சரியில்லாததால் கடைசி இரண்டு போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை, அவர் ரீசா ஹென்ட்ரிக்ஸுக்கு பதிலாக மாற்றப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் லுங்கி என்கிடி மற்றும் தப்ரேஸ் ஷம்சியும் விளையாடினர். இருவரும் ககிசோ ரபாடா மற்றும் லிசார்ட் வில்லியம்ஸுக்குப் பதிலாக களமிறங்கினர்.
தென்னாப்பிரிக்கா அணியில் விளையாடிய வீரர்கள்
தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி, ஜெரால்ட் கோட்ஸி.
பாகிஸ்தான் அணியில் விளையாடிய வீரர்கள்
பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர் மற்றும் ஹாரிஸ் ரவுஃப்.
மேலும் படிக்க - இங்கிலாந்து அணியை இந்த பிளான் வச்சு தான் வீழ்தினோம் - லஹிரு குமாரா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ