துபாயில் நடைபெற்ற ஐசிசி T20 உலகக் கோப்பை 2021 இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி.  பரபரப்பான இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டேவிட் வார்னரின் மனைவி கேண்டீஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வைரலாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டேவிட் வார்னர் ப்ளேயர், ஆட்டத்தொடரின் நாயகனாக (Player of The Tournament) தேர்ந்தெடுக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பை 2021 போட்டிகளில் டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் வார்னர் சிறப்பாக விளையாடினார்.


ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் டேவிட் வார்னரின் மனைவி கேண்டீஸ் வார்னர், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2021க்கான அணியில் அவரைச் சேர்ப்பது குறித்து கேள்வி எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய செய்தியை அளித்துள்ளார். 35 வயதான வார்னரின் வயது மற்றும் செயல்திறன் பற்றிய கேள்விகள் தற்போது நீர்த்துப் போய்விட்டன.


READ ALSO | உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!


முதல் T20 WC பட்டத்தை வென்றதற்காக ஆஸ்திரேலிய அணியை வாழ்த்திய கேண்டிஸ், தனது மற்றொரு பதிவில், தனது கணவருக்கு வாழ்த்துக்களை அனுப்பினார்.



அவர் "ஃபார்மில் இல்லை, மிகவும் வயதானவர் மற்றும் மெதுவாக செயல்படுபவர்! வாழ்த்துக்கள் @davidwarner31" என்று எழுதினார். இந்த வாழ்த்துச் செய்தி, வார்னரை விமர்சித்தவர்களுக்கு அவர் கொடுக்கும் பதிலடியாக பார்க்கப்படுகிறது.



ப்ளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் விருதை வென்ற வார்னர், "எப்போதும் நன்றாகவே உணர்ந்தேன். இரண்டு பயிற்சி ஆட்டங்களுக்கு நடுவில் அதிக நேரம் கிடைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, அடிப்படைகளுக்குத் திரும்புவது. மிகவும் கடினமாக இருந்தது, எனது அணியினர் எனக்கு நல்ல ஆதரவு கொடுத்தார்கள்" என்று கூறினார்.


முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் வார்னரைப் பாராட்டினார். டேவிட் வார்னரை நிறைய பேர் விமர்சித்தனர். ஆனால் வார்னரின் கடைசி இரண்டு வாரங்கள் "அற்புதமானது" என்று ஸ்மித் பாராட்டினார். நேற்றைய இறுதிப் போட்டியில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. 


ALSO READ | 2014:ஒருநாள் போட்டியில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!


அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. 5 ரன்களில் கேப்டன் ஃபின்ச் வெளியேற, மிட்செல் மார்ஷுடன் கை கோர்த்த வார்னர் அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.  ஆஸ்திரேலியா ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில், வார்னர் 34 பந்துகளில் அரைசதம் அடித்து வெளியேறினார். 


ஆஸ்திரேலியாவின் மார்ஷ் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். மெக்ஸ்வெல்லும் அதிரடியாக விளையாடியதால், ஆஸ்திரேலிய அணி  19ஆவது ஓவரில்173 ரன்களை எடுத்து தனது முதல் டி-20 கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி, ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்தது. சூப்பர் 12 சுற்றில் அரையிறுதிக்குத் தகுதி பெறுமா என்றும் பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், ஆஸ்திரேலியா தனது திறமையை வலுவாக நிரூபித்துள்ளது. 


 ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து ஃபார்மில் இல்லாததால், ஹைதராபாத் அணியில் இருந்தும் ஓரம் கட்டப்பட்ட டேவிட் வார்னர், இந்த போட்டித் தொடரில், 7 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 289 ரன்களை குவித்து, 2021 டி 20 உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார் வார்னர்.  303 ரன்களுடன் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் இருக்கிறார்.


ALSO READ | ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டின் எந்த வடிவம் சேர்க்கப்படும்? T20 இல்லை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR