2014ல் இன்று! ஒருநாள் போட்டியில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!

ஸ்ரீலங்காவிற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 173 பந்துகளில் 264 ரன்கள் அடித்து அசத்தினார் ரோஹித் சர்மா.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2021, 12:49 PM IST
  • ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றிருந்தது இந்தியா.
  • ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை மட்டும் இன்றி 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 209 ரன்கள் அடித்த தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.
2014ல் இன்று! ஒருநாள் போட்டியில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!  title=

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ரீலங்காவிற்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தார் ரோகித் சர்மா.  இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு மீண்டு வந்து இந்த சாதனை படைத்திருந்தார்.  ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றிருந்தது இந்தியா.  4வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா.  ஸ்ரீலங்கா அணியின் பவுலர்களை நாலாபுறமும் துவம்சம் செய்த ரோகித் 173 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 33 பவுண்டரிகள் உட்பட 264 ரன்கள் குவித்தார். 

இந்த போட்டியில் பல சாதனைகளை படைத்து இருந்தார் ரோஹித் சர்மா.  ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை மட்டும் இன்றி 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 209 ரன்கள் அடித்த தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.  மேலும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்து இருந்த சேவாக்கின் 219 ரன்கள் சாதனையையும் முடியடித்தார்.  சச்சின் டெண்டுல்கர், மார்டின் கப்டில், சேவாக், கெயில், ஜமான் போன்றோர் இதுவரை ஒருநாள் தொடரில் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளனர்.   

rohit

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.  151 பந்துகளில் இரட்டை சதத்தை அடித்து அசத்திய ரோஹித் சர்மா 2 முறை அவுட் ஆகாமல் தப்பினார்.  வெறும் 15 பந்துகளில் 200 ரங்களில் இருந்து 250 ரன்களை கடந்தார்.   173 பந்துகளில் 264 ரன்கள் அடித்து இருந்த நிலையில் போட்டியின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.  இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்து இருந்தது.  ஶ்ரீலங்கா அணி 251 ரன்களை மட்டுமே எடுத்து, 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

 

கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இன்று வரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.  தற்போது டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ கோலி, பந்த்க்கு ஓய்வு! ரகானே தலைமையில் களமிறங்கும் இந்திய டெஸ்ட் அணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News