ஐசிசி T20 உலகக் கோப்பை 2021 பைனல் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. பரபரப்பான இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி. இன்று துபாயில் நடைபெற்ற பைனல் போட்டியில் இரு அணிகளும் மோதின. இரண்டு அணிகளுமே தங்களது முதல் உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக விளையாடினர். முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே பவுலிங்கில் அசத்திய ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டும் பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். ஸ்டார்க் ஓவரில் 4 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து விளாசிய வில்லியம்சன் 48 பந்தில் 85 ரன்கள் அடித்து விளாசினார். இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிறிது கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடியது. அரையிறுதி போலவே இந்த போட்டியிலும் பின்ச் ரன்கள் அடிக்க தவறினார். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். மறுபுறம் மார்ஸ் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 18.5 ஓவரில் 173 ரன்கள் அடித்து பைனல் போட்டியை வென்றது ஆஸ்திரேலியா. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 உலக கோப்பையை முதல் முதலாக வென்றது ஆஸ்திரேலிய அணி. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியும் கோப்பையை தவறவிட்டது நியூசிலாந்து.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.