புதுடெல்லி: ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது குறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வந்தாலும், பிரபலங்கள் கூறும் கருத்தும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
பிரபலங்கள் தான்தோன்றியாக மனதில் வந்ததையெல்லாம் சொல்லிவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான் அதற்கு காரணம். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது தொடர்பான மிகப் பெரிய விஷயத்தை கூறியுள்ளார்.
T20 அல்ல T10 கிரிக்கெட் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்படும்
டி10 வடிவத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகவும், அதை ஒலிம்பிக்கில் சேர்க்கலாம் என்று ஃபாஃப் டு பிளெசிஸ் கருதுகிறார். நவம்பர் 19 முதல் டிசம்பர் 4 வரை சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் அபுதாபி டி10 லீக்கில் மூத்த பேட்ஸ்மேன் அறிமுகமாக உள்ளார்.
READ ALSO | T20 இல் சொதப்பல்; முடிந்தது இந்திய அணியின் இந்த வீரரின் சோலி
டி10 கிரிக்கெட்டில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது
விர்ச்சுவல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், ’நான் நீண்ட காலமாக, கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறேன், இருந்தாலும் டி10 கிரிக்கெட் என்னை ஈர்க்கிறது. நோக்கி ஈர்க்கப்பட்டேன். என்னைப் போன்றே பல வீரர்கள் இதுபோன்ற போட்டிகளில் விளையாட விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்’.
டி10-ன் எதிர்காலம் நன்றாக இருக்கிறது என்று கூறிய அவர், இது ஒலிம்பிக்கிலும் பயன்படுத்தக்கூடிய கிரிக்கெட்டின் சிறந்த வடிவம் என்று தெரிவித்தார். மேலும் டி10யில் போட்டியின் நேரமும் குறிவதால், அது பார்வையாளர்களை ஈர்க்கிறது என்றும், எனவே, டி10 இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைப்பதாக தெரிவிக்கிறார்.
2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்நடைபெறவுள்ளது. விளையாட்டின் வடிவங்கள் குறித்து பேசிய பிளெசிஸ், “நீங்கள் ஒரு வடிவத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாறி விளையாடும்போது, இதுவரை விளையாடிய ஆட்டத்தைப் பற்றிய புரிதல் மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன். தொடர்ச்சியான முடிவுகளைப் பெறும் 'புளூபிரிண்ட்' பற்றி சிந்திக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் டு பிளெசிஸ் சிறப்பாக செயல்பட்டார், அதில் அவரது அணி சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டத்தை வென்றது. வரவிருக்கும் அபுதாபி டி10 சீசனில் அவர் Bangla Tigers அணியை வழிநடத்துவார்.
Also Read | ENG vs NZ டி20 உலகக் கோப்பை 2021 முதல் அரையிறுதியை எப்போது, எங்கு பார்க்கலாம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR