300 டி20 போட்டிகளில் கேப்டன்: தோனியின் கேப்டன்சி சாதனைகள்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 பைனல் போட்டியில் தனது கேப்டனாக தனது 300 வது டி20 போட்டியில் விளையாடினார்
ஐபிஎல் 2021 பைனல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய சென்னை அணி பைனலில் 27 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
தோனி தலைமையிலான சென்னை அணி கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அடுத்த ஆண்டு இன்னும் பலத்துடன் வருவோம் என்று தோனி கூறியிருந்தார். தோனி சொன்னது போலவே இந்த ஆண்டு அதிக பலம் வாய்ந்த அணியாக களம் இறங்கியது சென்னை. லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களிலேயே இருந்து வந்தது.
தோனி சரியாக விளையாடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு குவாலிபையர் போட்டியில் தனது பினிஷிங் ஆட்டத்தின் மூலம் அனைவரையும் வாயடைக்க செய்தார். தோனி இதுவரை கேப்டனாக இருந்து 11 கோப்பைகளை கைப்பற்றியுள்ளார்.
2007 - ஐசிசி டி 20 உலக கோப்பை
2010 - ஐபிஎல் கோப்பை
2010 - சாம்பியன்ஸ் லீக் போட்டி
2010 - ஆசிய கோப்பை
2011 - ஐசிசி ஐம்பது ஓவர் உலக கோப்பை
2012 - ஐபிஎல் கோப்பை
2013 - ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
2014 - சாம்பியன்ஸ் லீக் கோப்பை
2016 - ஆசிய கோப்பை
2018 - ஐபிஎல் கோப்பை
2021 - ஐபிஎல் கோப்பை
மேலும் தோனி தலைமையில், 12 ஐபிஎல் சீசன்களில் 5 முறை பைனல் போட்டிக்கும், 2 முறை பிளே ஆப் சுற்றுக்கும், 4 முறை கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ALSO READ இது சென்னை சூப்பர்ர்ர் கிங்ஸ்! 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR