இதை செய்தால் மட்டுமே இந்தியாவால் ஆசிய கோப்பை பைனலுக்கு தகுதி பெற முடியும்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த டி20 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 போட்டியில், முகமது ரிஸ்வான் அதிரடியாக 71 ரன் அடிக்க, பாகிஸ்தான் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு பந்து மீதமிருக்க வெற்றி இலக்கை எட்டியது. குஷ்தில் ஷா மற்றும் ஆசிப் அலி கடைசி ஓவரில் பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அர்ஷ்தீப் சிங் ஒரு முக்கியமான கேட்சை விட்ட பிறகு போட்டியின் முடிவு மாறியது. இந்நிலையில் செப்டம்பர் 11ம் தேதி துபாயில் நடக்கும் பைனல் போட்டியில் மீண்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆசிய கோப்பையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
'சூப்பர் 4' ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையுடன், இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட உள்ளது. தற்போது வரை இலங்கையும் பாகிஸ்தானும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை (செப்டம்பர் 6) மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு (செப்டம்பர் 8) எதிரான மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றிபெற வேண்டும். இந்தியா தனது அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து வெளியேறும்.
மேலும் படிக்க | இந்த வீரரை கவனிக்காத இந்திய அணி: ரோகித் இடம் கொடுக்காதது ஏன்?
எஞ்சியிருக்கும் இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று, பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தினால், இலங்கை போட்டியிலிருந்து வெளியேறிவிடும். ஆனால் இலங்கை தனது அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால், நிகர ஓட்ட விகிதம் (NRR) முக்கியமானதாக வரும். இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற, அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்திய அணி தற்போது -0.126 NRR ஐக் கொண்டுள்ளனர், இலங்கை (+0.589) மற்றும் பாகிஸ்தான் (+0.126) புள்ளிகள் பட்டியலில் தலா இரண்டு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். அவரது முக்கியமான இன்னிங்ஸ் இந்தியா ஒரு மிடில்-ஆர்டர் தடுமாற்றத்திலிருந்து தப்பிக்க உதவியது மற்றும் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181-7 என்ற ரன்னை அடித்தது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அவரது தொடக்க பங்குதாரர் கே.எல். ராகுல் ஆகியோர் பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் விறுவிறுப்பாக 54 ரன்கள் சேர்த்தனர். ஆனால் ஆறாவது ஓவரில் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் ராகுலும் ஆட்டமிழந்தார், பின்னர் சூர்யகுமார் யாதவை 13, ரிஷப் பந்த் 14 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா இரண்டு பந்தில் டக் அவுட்டாக அணியின் ஸ்கோர் சரிந்தது. இதுவும் அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | IND vs PAK: இவர் வந்த பிறகு இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ