IND vs PAK: இவர் வந்த பிறகு இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி

இந்திய அணிக்கு இந்த வீரர் வந்தது முதல், முதன்முறையாக இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 5, 2022, 04:24 PM IST
  • 17 வெற்றிகளை பெற்ற இந்திய வீரர்
  • இவர் களமிறங்கிய போட்டிகளில் இந்தியா வெற்றி
  • முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது
IND vs PAK: இவர் வந்த பிறகு இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி  title=

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதிய 2வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், 2வது போட்டியில் சில சொதப்பலான பீல்டிங்கால் வெற்றி பெற வேண்டிய ஆட்டம் தோல்வியாக அமைந்தது. இந்த தோல்வி, ஒருவர் இந்திய அணியில் இடம்பிடித்த பிறகு அடைந்த முதல் தோல்வியாகும்.  

யார் அந்த வீரர்?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியில் பல மாற்றங்களை செய்தார் கேப்டன் ரோகித் சர்மா. தீபக் ஹூடா உள்ளிட்டோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுதார். அவர் இந்த ஆண்டு முதன்முறையாக இந்திய அணிக்கு அறிமுகமான நிலையில், அவர் களமிறங்கிய போட்டிகளில் எல்லாம் இந்திய அணி வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டி முதல் தோல்வியாகவும் அமைந்துவிட்டது. 

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் விளையாடும் 11-வது இடத்தில் மூன்று முக்கிய மாற்றங்களைச் செய்தார். ரோஹித் சர்மா, தகாட் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடாவை அணியில் சேர்த்தார். தீபக் ஹூடா இந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். இந்திய அணியில் இணைந்த பிறகு முதல் முறையாக தோல்வியை சந்திக்க நேரிட்டது.

உலக சாதனை

தீபக் ஹூடா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை டீம் இந்தியாவுக்காக மொத்தம் 9 டி20 மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். இந்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. 9 டி20 போட்டிகளில் 54.80 சராசரியில் 274 ரன்கள் எடுத்த தீபக்ஹூடா, 8 ஒருநாள் போட்டிகளில், 28.2 சராசரியில் 141 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் களமிறங்கிய 17 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்ததால், ஒரு வீரராக தோல்வியே அடையாமல் 17 போட்டிகளில் விளையாடியவர் என்ற உலக சாதனை படைத்திருந்தார். அந்த சாதனைக்கு நேற்று பாகிஸ்தான் அணி முற்றுப்புள்ளி வைத்தது. 

மேலும் படிக்க | தோல்விக்கு காரணம் இதுதான்! இணையத்தில் குமுறும் ரசிகர்கள்!

மேலும் படிக்க | CSK IPL2023: சிஎஸ்கேவுக்கு கேப்டன் தோனி; நிர்வாகத்தின் முடிவுக்கு பின்னணி இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News