சென்னை அணி பந்துவீச்சில் சரிந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி...
IPL 2019 தொடரின் 50-லீக் ஆட்டத்தில் சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் 50-லீக் ஆட்டத்தில் சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் 50-லீக் ஆட்டம் சென்னை சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தனர். அணியில் அதிகப்பட்சமாக சுரேஷ் ரெய்னா 59(37) ரன்கள் குவித்தார். அணித்தலைவர் டோனி 44(22) ரன்கள் குவித்தார்.
டெல்லி அணி தரப்பில் ஜெகதீஷ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரத்திவி ஷா 4(5) ரன்களுக்கு வெளியேற இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். அணி தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் அதிகப்பட்சமாக 44(31) ரன்கள் குவித்தார. எனினும் ஆட்டத்தின் 16.2-வது ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த டெல்லி அணி 99 ரன்கள் மட்டுமே குவித்தது. சென்னை அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை டோனி தட்டிச்சென்றார்.
இதனையடுத்து சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் சென்னை அணி 18 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடம் பிடித்தது.