2008 முதல் 2019 வரை சென்னை சூப்பர் கிங்ஸின் பயணம்! 2020-ல் எப்படி? ஒரு அலசல்
2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் பயணம் எப்படி இருந்தது. ஒவ்வொரு வருடமும் புள்ளி அட்டவனையில் இந்த இடத்தில் இருந்தது. எத்தனை முறை சாம்பியன் பட்டத்தை வென்றார்கள என்பதைக் குறித்து பார்ப்போம்.
Chennai Super Kings' journey: 2008 ஆம் ஆண்டில் இருபது-20 ஓவர்கள் கொண்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் இந்திய கிரிக்கெட் வாரியம் அமைப்பால் (BCCI) துவங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் பன்னிரண்டு சீசன் நடைபெற்றுள்ளன. தற்போது UAE-ல் ஐபிஎல் 13வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி சாம்பியன் பட்டத்தை (IPL Champion) வென்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல்-மே மாதங்களில் ஐபிஎல் தொடர் நடத்துப்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை உலக முழுவதும் பரவிய கொரொனா வைரஸ் (COVID-19) அச்சம் காரணமாக போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் IPL 2020 தொடர் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, இதுவரை 39 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இன்று 40 வது போட்டி நடைபெற உள்ளது. அதில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.
2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் (Chennai Super Kings) பயணம் எப்படி இருந்தது. ஒவ்வொரு வருடமும் புள்ளி அட்டவனையில் இந்த இடத்தில் இருந்தது. எத்தனை முறை சாம்பியன் பட்டத்தை வென்றார்கள என்பதைக் குறித்து பார்ப்போம்.
ALSO READ | #women cricketer: இதுவொரு கிரிக்கெட் வீராங்கனையின் திருமணகோலம்!
IPL 2008: மூன்றாவது இடம் (இறுதி போட்டியில் தோற்றது)
IPL 2009: இரண்டாவது இடம் (அரையிறுதி)
IPL 2010: மூன்றாவது இடம் (பட்டத்தை வென்றது)
IPL 2011: முதல் இடம் (பட்டத்தை வென்றது)
IPL 2012: நான்காவது இடம் (இறுதி போட்டியில் தோற்றது)
IPL 2013: முதல் இடம் (இறுதி போட்டியில் தோற்றது)
IPL 2014: மூன்றாவது இடம் (அரையிறுதி)
IPL 2015: முதல் இடம் (இறுதி போட்டியில் தோற்றது)
IPL 2016: தடை செய்யப்பட்டது
IPL 2017: தடை செய்யப்பட்டது
IPL 2018: இரண்டாவது இடம் (பட்டத்தை வென்றது)
IPL 2019: இரண்டாவது இடம் (இறுதி போட்டியில் தோற்றது)
IPL 2020: தற்போதைய நிலவரப்படி (10 போட்டிகள் பங்கேற்றுள்ளது) 8 வது இடத்தில் உள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR