புதுடெல்லி: கடந்த சில ஆண்டுகளில், திருமணத்தின் போதும் அதற்கு முன்னும் வெவ்வேறு விதமான போட்டோஷீட்களை எடுக்கும் போக்கு உள்ளது. திருமணம் என்ற சிறப்பு தருணத்தை மறக்கமுடியாததாக மாற்ற அனைவரும் விரும்புகிறார்கள். இப்போது கிரிக்கெட் வீரர்கள், தாங்களும் திரையுலக பிரபலங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று கோதாவில் குதிக்கத் தொடங்கி விட்டனர். பங்களாதேஷின் கிரிக்கெட் வீராங்கனை சஞ்சிதா இஸ்லாம் தனது திருமண போட்டோஷூட் மூலம் சமூக ஊடகங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டை விளையாடுவதோடு வேறு, அதை தனது வாழ்க்கையாகவே மாற்றி விடுவது வேறு. விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமானாலும் சரி, திருமண வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டுமானாலும் சரி, அன்பும், ஆத்மார்த்தமான பிணைப்பும் வேண்டும். இந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீராங்கனையின் திருமண போட்டோஷூட் (Wedding Photoshoot) ஆல்பத்தைப் பார்த்தால் அவர் கிரிக்கெட்டை எவ்வளவு காதலிக்கிறார் என்பது புரியும். தனித்துவமான இந்த போட்டோஷூட் இணையத்தில் பரபரப்பை உருவாக்கி, சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.
கிரிக்கெட் வீராங்கனை சஞ்சிதா இஸ்லாம் ((Sanjida Islam), அவருடைய இந்த புகைப்படங்களை ஐ.சி.சி பகிர்ந்துள்ளது, கிரிக்கெட் ரசிகர்களும் இந்த புகைப்படங்களை ரசித்து பார்த்து ஒன்ஸ்மோர் கேட்கிறார்கள்.
சஞ்சிதாவின் திருமண போட்டோஷூட்டின் பாணி மிகவும் வித்தியாசமானது. இந்த படப்பிடிப்பை கிரிக்கெட் ஆடுகளத்திலேயே எடுக்க முடிவு செய்த அவர், அதை நிறைவேற்றியும் விட்டார். பின்னர் அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதற்குப் பிறகு, சஞ்சிதாவின் இந்த படங்கள் வைரலாகிவிட்டன. இந்த படங்களில், சஞ்ஜிதா ஆடுகளத்தில் ஆரஞ்சு நிற புடவையை அணிந்து காட்சியளிக்கிறார்.
கிரிக்கெட் வீரர் சஞ்சிதா சமீபத்தில் ரங்க்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் மிம் மொசாடீக்கை (Mim Mosaddeak) மணந்தார். சஞ்சிதாவின் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் புகைப்படங்களை ஐ.சி.சி (ICC) பகிர்ந்துள்ளது. சஞ்சிதா ஆகஸ்ட் 2012 இல் அயர்லாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டில், மகளிர் ஆசியா கோப்பை டி 20 பட்டத்தை முதன்முறையாக அணி வென்ற போது, அதில் சஞ்சிதாவும் இடம் பெற்றிருந்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4