SRH Vs CSK Dream 11: நடப்பாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2021) தொடரின் 44 வது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 7:30 மணி முதல் தொடங்கவுள்ளது. ​​ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கும் மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் கேன் வில்லியம்சன் (Kane Williamson) தலைமையிலான எஸ்ஆர்எச் இடையே கடுமையான மோதல் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேன் வில்லியம்சனுக்கு பெரிய பொறுப்பு:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை 10 போட்டிகளில் 2 மட்டுமே வென்றுள்ளது. ஐபிஎல் 2021 தொடருக்கு மத்தியில், ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பு மாற்றப்பட்டது. ஆனால் அணியின் வெற்றி பாதையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. புகழ்பெற்ற பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை (David Warner) கேப்டன் பதவியில் இருந்து அகற்றினர். அவரின் கேப்டன்சியின் கீழ் ஹைதராபாத் அணி ஒரு ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. வார்னர் இல்லாத நிலையில், அணியின் செயல்திறனை மேம்படுத்த வில்லியம்சனுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. 



ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களில், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜேசன் ஹோல்டர் இதுவரை சிறப்பாக பந்துவீசினர் மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி 17 பந்துகளில் ஒரு பவுண்டரியை கூட அனுமதிக்கவில்லை. இந்த அணி விளையாடிய கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்த பிறகு, வீரர்களின் உற்சாகம் அதிகரித்து உள்ளது. அதே வேகத்துடன் இன்றைய போட்டியிலும் ஹைதராபாத் வீரர்கள் களம் இறங்குவார்கள். வெற்றிகளை குவித்து வரும் சென்னை அணியை வெற்றிக்கொள்ளுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்பதை இன்றைய ஆட்டநேர முடிவில் தெரிந்துவிடும்.


ALSO READ | வெளிச்சம் பெற்றது சன்ரைசஸ்! தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி!


சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக வெற்றி:
மறுபுறம், மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்து பிளேஆஃப்களில் தங்கள் இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை 10 போட்டிகளில் 8 வெற்றி பெற்றுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றி, சென்னை அணியின் முதலிடத்தை மேலும் உறுதிப்படுத்தும். அதே நேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்வி அண்டைந்தால், லீக் போட்டியுடன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும்.


சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் (சாத்தியம்):
ரிதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஜோஷ் ஹேசில்வுட்/டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர்.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SunRisers Hyderabad) விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் (சாத்தியம்):
ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா.


ALSO READ | தோனிக்கு 40 வயதாகிவிட்டது, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்: ஹாக் அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR